Home
Mobile

எந்த போனும் நிக்க முடியாது.. 24GB ரேம்.. 1TB மெமரி.. SONY சென்சார் கேமரா.. BOE டிஸ்பிளே.. எந்த மாடல்?

உலகிலேயே முதல்முறையாக ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போனானது, 24ஜிபி பிசிகல் ரேம் கொண்டு அறிமுகம் செய்யப்படயிருக்கிறது. இதன் மற்ற அம்சங்களும் மிகவும் பிரம்மாண்டமாகவே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபோனின் வெளியீட்டு தேதி, விலை மற்றும் முழு அம்சங்கள் குறித்த விவரங்கள் இதோ.

ஆப்பிள் சாம்சங் போன்களுக்கு அடுத்தபடியாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் போன்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு உள்ளது. இந்தியாவிலும் ஒன்பிளஸ் போன்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஒன்பிளஸ் போன்களில் வரும் கேமரா அம்சங்கள், ஆப்பிள் போன்களுக்கு நிகராக இருக்கிறது. அதேபோல சிப்செட் பர்ஃபார்மன்ஸ் சாம்சங் போன்களுக்கு நிகராக இருக்கிறது.

24GB ரேம்.. SONY சென்சார் கேமரா.. BOE டிஸ்பிளே.. எந்த மாடல்?

இதனாலேயே இந்த நிறுவனத்தின் புதுப்புது மாடல்களுக்கு அதீத எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை மேலும் எகிற வைக்கும் விதமாக ஒன்பிளஸ் நிறுவனம், தனது ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போனில் 24 ஜிபி ரேம் கொடுக்கப்போவதாக அறிவித்தது.

ஆனால், இந்த போனுக்கு முன்னதாகவே ரெட்மேஜிக் 8 எஸ் ப்ரோ என்னும் போன் 24 ஜிபி ரேம் உடன் வெளியாகிவிட்டது. இதில் 16 ஜிபி ரேம் பிசிகல் ஆகவும், 8 ஜிபி ரேம் விர்ச்சுவல் ஆகவும் கொடுக்கப்பட்டது. ஆகவே, உலகின் முதல் 24 ஜிபி ரேம் போன் என்ற பெருமை அந்த போனுக்கு சென்று விட்டது. இதனால், ஒன்பிளஸ் நிறுவனம், 24 ஜிபி ரேமை பிசிகலாகவே கொடுக்க திட்டமிட்டது.

அதன்படி, இப்போது 24 ஜிபி பிசிகல் ரேமை உறுதி செய்து, விட்ட இடத்தை மீண்டும் பிடித்து விட்டது. இந்த போனின் மற்ற அம்சங்கள் எப்படி இருக்கிறது என்று இப்போது, பார்ப்போம். இந்த போன், 6.74 இன்ச் (2772 × 1240 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே போய் க்யூ9 பிளஸ் (BOE Q9+) மடலாகும்.

இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 450 பிபிஐ (PPI) பிக்சல் டென்சிட்டி, 1.5K ரெசொலூஷன், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 1.07 பில்லியன் டிஸ்பிளே கலர்கள், 2.17 மிமீ அல்ட்ரா நேரோவ் பாட்டம் பெசல் (Ultra Narrow Bottom Bezel), எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 1440Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

இந்த ஒன்பிளஸ் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் வருகிறது. இந்த ஒன்பிளஸ் போன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது.

அதன்படி, சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சொன்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமராவோடு 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் போனில் 150W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இருப்பதால், ஏரோஸ்பேஸ் கிரேடு 3டி டியான்காங் கூலிங் சிஸ்டம் (Aerospace Grade 3D Tiangong Cooling System) என்னும் புதிய டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டெக்னாலஜி பேட்டரி ஹீட், அன்லிமிடெட் சார்ஜிங் போன்றவற்றிலிருந்து பேட்டரியை பாதுகாக்கும். இந்த போன் சியான் (Cyan) மற்றும் கிரே (Grey) கலர்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

முதலில், ஆகஸ்ட் 16 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகிறது. அதன்பின் சில வாரங்களில் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும். இந்த போன் ரூ.40,000 பட்ஜெட்டில் வெளியாகும் போன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, முதல்முறையாக பிசிகலாகவே 24 ஜிபி ரேம் கொண்டு வெளியாகும் போனாக ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போன் மட்டுமே இருக்கப்போகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Ace 2 Pro With 24GB RAM, 1TB Storage, 5000mah Battery Confirmed Specification, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X