OnePlus வேற ரகம்.. 24GB ரேம், 1TB மெமரி.. 1.5K டிஸ்பிளே.. 150W சார்ஜிங்.. அரண்டுபோன மார்க்கெட்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ (OnePlus Ace 2 Pro) போனின் லீக்கான அம்சங்களை பார்த்து ஸ்மார்ட்போன் மார்க்கெட்டே அரண்டு போய்விட்டது. 24 ஜிபி ரேம், 1டிபி மெமரி, 1.5K டிஸ்பிளே மட்டுமல்லாமல் மற்றொரு பிரம்மாண்ட அம்சத்தை கொண்டிருக்கிறது.
அண்மைகாலமாக, ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், 24 ஜிபி ரேம் கொண்ட போன்களை களமிறக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. முதலில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் மாடலே 24 ஜிபி ரேம் கொண்ட போனாக வெளியாக இருந்தது. ஆனால், அந்த பெருமையை ரெட் மேஜிக் 8 எஸ் ப்ரோ போன் தட்டிச்சென்றுவிட்டது. இதனால், ஒன்பிளஸ் நிறுவனம் அதைவிட பிரம்மாண்ட அம்சத்துடன் ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போனை களமிறக்க திட்டமிட்டது.

அந்த வகையில், உலகின் எந்த போனின் கொடுக்கப்படாத ஜெனரேஷன் 2 சிப்செட்டை ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போனில் கொடுக்க திட்டமிட்டது. இந்த தகவல், இப்போது உறுதி செய்யப்படுவிட்டது. இந்த போனின் மொத்த அம்சங்களும் கசிந்துள்ளன. அவற்றை பார்த்து ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்க்கெட்டே வியந்திருக்கிறது. அப்படியென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ அம்சங்கள் (OnePlus Ace 2 Pro specifications): இந்த ஒன்பிளஸ் போனில் 6.74 இன்ச் (1240x2772) கர்வ்ட் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.5K ரெசொலூஷன் மற்றும் 1440Hz பிடபுள்யூஎம் (PWM) டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் ( Android 13 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த சிப்செட் அடுத்த ஜெனரேஷன் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டதாகும். இதுவரை வெளியான எந்த போனிலும் பயன்படுத்தப்படவில்லை.
இந்த போனில் சோனி ஐஎம்எக்ஸ்890 ( Sony IMX890) சொன்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ சென்சார் வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 16 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.
மொத்தமாக 24 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் வருகிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் டாப்-எண்ட் மாடலில் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்படுகிறது. பிளாக் (Black), சில்வர் (Silver) மற்றும் ப்ளூ (Blue) கலர்களில் விற்பனைக்கு வரவிருக்கிறது.
அதோடு லெதர் பினிஷிங் பேக் பேனல் டிசைனும் வருகிறது. இந்த போனின் விலை ரூ.40,000 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








