Home
Mobile

ஒட்டுமொத்த OnePlus பிரியர்களும் வெயிட்டிங் மோட்! அந்தவொரு மாடல் லீக்!

ஒட்டுமொத்த ஒன்பிளஸ் (OnePlus) பிரியர்களின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்த ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ (OnePlus Ace 2 Pro) போனின் முக்கிய அம்சங்கள் கசிந்துவிட்டன. சோனி சென்சாருடன் கூடிய கேமரா, 150W ஃபாஸ்ட் சார்ஜிங் என்று பின்னிப்பெடல் எடுக்கும் வகையிலிருக்கிறது.

இந்தியாவில் புதிதாக வெளியாகும் ஒன்பிளஸ் போன்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பானது, ஆப்பிள் போன்களுக்கு நிகராக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், ஒன்பிளஸ் போன் பிரியர்கள் அதன் புதிய போன்களுக்காக பல மாதங்கள் காத்திருந்து கூட வாங்க தயாராக இருக்கின்றனர்.

ஒட்டுமொத்த OnePlus பிரியர்களும் வெயிட்டிங் மோட்! அந்தவொரு மாடல் லீக்!

அதற்கு காரணம், ஒன்பிளஸ் போன்களில் வரும் அட்டகாசமான கேமரா மற்றும் டிசைன்களே ஆகும். அதுமட்டுமல்லாமல், மற்ற அம்சங்களும் அடுத்த லெவலில் இருக்கும். இந்த வரிசையில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய போனான ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ எப்போது வெளியாகும் என்ற காத்திருப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில் ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போனின் சிப்செட் (Chipset), கேமரா (Camera), பேட்டரி (Battery), டிஸ்பிளே (Display) குறித்த தகவல்கள் டிப்ஸ்டர் டிஜிட்டல் சார் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) தளத்தில் கசிந்துள்ளது. இந்த அம்சங்கள் குறித்து முழு விவரம் பின்வருமாறு.

ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ அம்சங்கள் (OnePlus Ace 2 Pro Specifications): இந்த ஒன்பிளஸ் போனின் டிஸ்பிளே கர்வ்ட் (Curved) டிசைனில் இருக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் பிடபுள்யூஎம் (PWM) டிம்மிங் கொண்டுள்ளது. இதன் அளவு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், 6.7 இன்ச் அளவில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்த போனின் விலை மிட்-ரேன்ஞ் போன்களை விட அதிமாக இருப்பதால் ஃபிளாக்ஷிப் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் வருகிறது. அதேபோல சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. ஆனால், அல்ட்ரா வைடு, டெப்த், மோக்ரோ மற்றும் செல்பீ கேமரா குறித்த தகவல்கள் வெளியாகிவில்லை.

இந்த ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதன் டாப்-எண்ட் வேரியண்ட்டில் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்படுகிறது. இதோடு 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த போன் விரைவில் வெளியாக இருக்கிறது. முதலில் சீனாவில் வெளியாகும். அதன் பின்பு மற்ற நாடுகளில் வெளியாகும். இந்த போனின் விலையை பொறுத்தவரையில், ரூ.38 ஆயிரம் அல்லது ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனைக்கு வரலாம்.

இந்தியாவில் வெளியாவதற்கான வாய்ப்புகள் குறைவே என்றாலும், இந்த ஒன்பிளஸ் போனின் ரீபிராண்டாக ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G) போன் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இதனால், இந்த போனில் லிமிடெட் எடிஷன் போன் மாடல் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Ace 2 Pro Specifications Leaked On Tipster Digital Chat Station With Snapdragon 8 Gen 2, 50MP Camera
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X