ஒவ்வொருத்தரும் வாங்க ஆசை படுவீங்க.. இந்த OnePlus போன் வந்தா மார்கெட்டே அதிரும்.. எந்த மாடல்?
உலகளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ (OnePlus Ace 2 Pro) போனின் பிரம்மாண்டமான புதிய அம்சம் அந்த நிறுவனத்தால், உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒன்பிளஸ் பிரியர்கள் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்று விட்டனர்.
இப்போது விற்பனைக்கு வரும் ஃப்ளாக்ஷிப் போன்களில் 24 ஜிபி ரேம் இருந்தால் மட்டுமே அந்த போனுக்கான எதிர்பார்ப்பு கிளம்புகிறது. ஏனென்றால், ரூ.40,000 க்கும் மேல் செலவு செய்து வாங்கும் போன்களில் பிரம்மாண்ட அம்சங்கள் இருக்க வேண்டும் என்பது ஸ்மார்ட்போன் பிரியர்களின் எண்ணமாக இருக்கிறது.

இதிலும் பிரபலமான நிறுவனங்களின் போன்களில் 24 ஜிபி ரேம் வந்தால், சொல்லவே வேண்டியதில்லை. எப்போது வரும் என்று காத்திருப்பு விண்ணை முட்டிவிடும். அந்த வரிசையில், ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போனில் 24 ஜிபி ரேம் வருவது உறுதி செய்யப்பட்டது மிகப்பெரும் கவனத்தை பெற்றது. இப்போது, மற்றொரு பிரம்மாண்ட அம்சமும் அந்த நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் கொடுக்கப்படும் என்ற தகவல் பரவியது. இந்த சிப்செட் இதுவரையில் வெளியான எந்த போனிலும் கொடுக்கப்படவில்லை. ஆகவே, இந்த போனே முதலாவதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒன்பிளஸ் நிறுவனம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வருவதை இப்போது, உறுதி செய்துள்ளது.
அதோடு, உலகில் முதல் முறையாக ஏரோஸ்பேஸ் கிரேடு 3டி டியாங்காங் கூலிங் சிஸ்டம் (Aerospace-Grade 3D Tiangong Cooling System) உடன் இந்த போன் வெளியாகும் என்பதையும் உறுதி செய்துள்ளது. இந்த போனின் மற்ற அம்சங்கள் எப்படி இருக்கிறது? எப்போது விற்பனைக்கு வருகிறது? அதன் விலை எவ்வளவு இருக்கும்? உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.
ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்: இந்த போன் 6.74 இன்ச் (1240x2772 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FH+) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1440Hz பிடபுள்யூஎம் (PWM) டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் வருகிறது. அதோடு அட்னிரோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 1 ப்ரோ போனில் டிரிபிள் லேயர் கேமரா செட்டப் வருகிறது.
அந்த வகையில், சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சொன்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போன் 16 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.
மொத்தமாக 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்டு விற்பனைக்கு வருகிறது. 150W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,500mAh பேட்டரி கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது 5000mAh பேட்டரியாக கூட இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஒன்பிளஸ் போன் ப்ளூ (Blue), பிளாக் (Black) மற்றும் சில்வர் (Silver) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கும்.
அதே போல, இந்த போன் லெதர் பினிஷிங் கொண்ட பேக் பேனல் டிசைனிலும் கிடைக்கும். ஏனென்றால், அந்த போனின் அதிகாரப்பூர்வ போட்டோக்களில் லெதர் பினிஷிங் பேக் பேனல் டிசைனை பார்க்க முடிகிறது. இந்த போனின் விலையை பொறுத்தவரையில் ரூ.40,000 ஆக நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாக அதன் மொத்த அம்சங்கள் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








