Home
Mobile

இங்க நான் தான் கிங்கு.. வந்தா மட்டும் போதும்.. மரண வெயிட்டிங்கில் ஒன்பிளஸ் பிரியர்கள்.. எந்த மாடல்?

உலகிலேயே முதல்முறையாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எஸ்ஓசி சிப்செட் கொண்டு வெளியாகயிருக்கும் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின், ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ (OnePlus Ace 2 Pro) போனின் மற்றொரு பிரம்மாண்ட அம்சம் தெரியவந்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

ஒன்பிளஸ் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களையும் மரண வெயிட்டிங் மோடில் போட்ட போன் என்றால், அது ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ மாடலாகவே இருக்கும். ஏனென்றால், இந்த போனில் கொடுக்கப்பட்டிருக்கும் அம்சங்கள் பிரம்மாண்டத்துக்கே பிரம்மாண்டாக இருப்பதால், அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது.

வந்தா போதும்.. மரண வெயிட்டிங்கில் ஒன்பிளஸ் பிரியர்கள்.. எந்த மாடல்?

உலகிலேயே முதல் முறையாக 24 ஜிபி ரேம் கொண்ட போனாக ஒன்பிளஸ் களமிறங்க இருந்தது. ஆனால், ரெட் மேஜிக் 8 எஸ் ப்ரோ என்னும் கேமிங் போன் அந்த இடத்தை தட்டிச் சென்று விட்டது. இதனால், ஒன்பிளஸ் நிறுவனம், 24 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எஸ்ஓசி சிப்செட்டையும் ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போனில் கொடுக்க திட்டமிட்டது.

சொல்லப்போனால், இதுவரை வெளியான ஆண்ட்ராய்டு போன்களில் உயர்தரமாக ஜென் 1 சிப்செட் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்போது, இந்த போனில் ஜென் 2 சிப்செட் வருகிறது. இப்படி ரேம் மற்றும் சிப்செட்டின் அடிப்படையில் உலகின் முதல் போனாக ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ இருக்கப்போகிறது.

இதுவே மிகப்பெரும் அம்சங்களாக பார்க்கப்படும் வேளையில், இப்போது மேலுமொரு பிரம்மாண்ட அம்சம் குறித்த தகவல்கள் கசிந்து அந்த போன் மீதான எதிர்பார்ப்பை விண்ணை முட்ட செய்துள்ளது. இந்த போனின் சார்ஜிங் திறன் குறித்த தகவல் இப்போது, வெளியாகியிருக்கிறது. இந்த நேரத்தில் அந்த போனின் அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ அம்சங்கள் (OnePlus Ace 2 Pro specifications): இந்த போன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், கொண்ட 6.74 இன்ச் (1240x2772 பிக்சல்கள்) கர்வ்ட் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 1440Hz பிடபுள்யூஎம் (PWM) டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜென் 2 சிப்செட் வரும் முதல் போனாக ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒன்பிளஸ் போனில் சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சொன்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.

அந்த வகையில், 24 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. முன்னதாக, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியது. ஆனால், இப்போது, 150W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,500mAh பேட்டரி கொடுக்கப்படுவதாக தகவல் கசிந்துள்ளது. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 2 பிரோ போன் பிளாக் (Black), சில்வர் (Silver) மற்றும் ப்ளூ (Blue) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வரவிருக்கிறது.

இந்த போனின் பேக் பேனல் லெதர் பினிஷிங் கொண்ட டிசைனிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய போனின் விலை ரூ.40,000 ஆக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Ace 2 Pro 3C Certification Confirms 150W Fast Charging Support Expected Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X