ஒன்பிளஸ் 9ஆர் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: இப்பதான் வந்துச்சு அதுக்குள்ள ஒரு அப்டேட்!

|

ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.2.1.1 புதுப்பிப்பை பெற்றுள்ளது. ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன் புதுப்பிப்பு ஆண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் பிழைத்திருத்தம் மற்றும் மேம்படுத்தல் அம்சத்தை கொண்டு வருகிறது.

ஒன்பிளஸ் 9 தொடர் சாதனங்கள்

ஒன்பிளஸ் 9 தொடர் சாதனங்கள்

ஒன்பிளஸ் 9 தொடர்களில் மூன்று ஸ்மார்ட்போன் வெளியானது. இதில் ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9ஆர், ஒன்பிளஸ் 9 ப்ரோ ஆகிய சாதனங்கள் இடம்பெற்றது. இதில் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோவிற்கு முன்னதாகவே ஆக்ஸிஜன் ஓஎஸ் புதுப்பிப்புகள் வெளியிட்டது. தற்போது நிறுவனம் ஒன்பிளஸ் 9ஆர் சாதனத்துக்கு புதுப்பிப்பை வெளியிட்டது.

ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.2.1.1 அப்டேட்

ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.2.1.1 அப்டேட்

இந்தியாவில் ஒன்பிளஸ் 9ஆர் பயனர்களுக்கு நிறுவனம் ஒன்பிளஸ் ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.2.1.1-ஐ வெளியிட்டுள்ளது. இந்த புதுப்பிப்பானது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த அம்சமானது பிழைத் திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தல்களைக் கொண்டிருக்கிறது. ஆரம்பக் கட்டமாக குறுகிய பயனர்களுக்கும் அடுத்தடுத்த நாட்களில் அதிக அளவிலான பயனர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பயனர்கள் அனுபவம்

சிறந்த பயனர்கள் அனுபவம்

பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் விதமாக ஒன்பிளஸ் சார்ஜிங் நிலைத்தன்மையை மேம்படுத்தியுள்ளது. பல்வேறு திருத்தம் இதில் கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக சாதனம் சார்ஜிங் நிலையில் இருக்கும்போது உள்வரும் அழைப்புகளில் தாமதம் ஏற்படுவதை நிறுவனம் சரி செய்திருக்கிறது.

உள்அழைப்பு மேம்படுத்தல்

உள்அழைப்பு மேம்படுத்தல்

இந்த மேம்படுத்தலில் சிறந்த பயனர் அனுபவத்தை வழங்க சார்ஜிங் நிலைத்தன்மையை நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. அதேபோல் கால் ஆஃப் டூட்டி மொபைலுக்கான ஹாப்டிக் அம்சமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இரட்டை சிம் கார்ட் உடன் உள்வரும் ரிங்டோனின் அசாதாரண மாற்றத்தையும் நிறுவனம் சரி செய்தது. பயன்பாட்டில் இருக்கும்போது உள்வரும் அழைப்பு தாமதத்தை நிறுவனம் சரி செய்திருக்கிறது. மேலும் அலாரம் டோன்களின் அதிர்வுறும் செயல்திறனை நிறுவனம் மேம்படுத்தியது.

ஒன்பிளஸ் 9ஆர் அம்சங்கள்

ஒன்பிளஸ் 9ஆர் அம்சங்கள்

 • டிஸ்பிளே: 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே (1,080x2,400 பிக்சல்)
 • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
 • ரேம்:8ஜிபி/12ஜிபி
 • மெமரி:128ஜிபி/256ஜிபி
 • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஒசி
 • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11
 • ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
 • செல்பீ கேமரா: 16எம்பி
 • பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
 • 65 வாட் வார்ப் சார்ஜிங் ஆதரவு
 • வைஃபை 6, ப்ளூடூத் 5.1,
 • ஜிபிஎஸ், என்எப்சி
 • ஒன்பிளஸ் 9ஆர் விலை

  ஒன்பிளஸ் 9ஆர் விலை

  8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999-ஆக உள்ளது

  12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.43,999-ஆக உள்ளது

Best Mobiles in India

English summary
Oneplus 9R smartphone Gets Oxygen Os 11.2.1.1 Update in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X