மார்ச் 23: தரமான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 9இ.!
ஒன்பிளஸ் நிறுவனம் வரும் மார்ச் 23-ம் தேதி புதிய ஒன்பிளஸ் 9இ ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் மற்றும் அசத்தலான கேமரா வசதியுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவந்த தகவலின்படி இந்த ஒன்பிளஸ் 9இ ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி இந்த ஒன்பிளஸ் 9இ ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்த ஒன்பிளஸ் 9இ ஸ்மார்ட்போன் ரூ.25000 அல்லது ரூ.35000 விலையில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அசத்தலான கேமராக்களுடன் இநந்த ஒன்பிளஸ் 9இ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன்பு வெளியான ஒன்பிளஸ் 9ப்ரோ அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு மிகவும் அருமையாக உதவும் இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் வசதி மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி Sony IMX766 வைடு ஆங்கிள் லென்ஸ் + 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தில் QHD+டிஸ்பிளே வசதி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன்வெளிவரும். பின்பு 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இவற்றுள் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதற்குமுன்பு வெளிவந்த ஒன்பிளஸ் 9 சாதனத்தின் தகவல்களை விரிவாகப் பார்ப்போம்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஒன்பிளஸ் 8 தொடர் ஸ்மார்ட்போன்களை விட அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனங்கள் வெளிவரும். ஆனால் இவற்றின் விலை சற்று உயர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications