OnePlus 9E | OnePlus 9R பற்றி உங்களுக்கு தெரியுமா? இது என்ன புது மாடலா இருக்கு?

|

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 9 தொடர் ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்தத் தொடரில் ஒன்ப்ளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒரு மூன்றாவது சாதனம் நிறுவனத்தின் பட்டியலில் உள்ளது. இந்த மூன்றாவது சாதனம் முன்பு ஒன்பிளஸ் 9E என அறிமுகம் செய்யப்படும் என்று வதந்தி பரப்பப்பட்ட நிலையில், இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் 9 மாடல்

இந்த மூன்றாவது ஒன்பிளஸ் 9 மாடல் ஸ்மார்ட்போன் இப்போது ஒன்பிளஸ் 9R என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை டிப்ஸ்டர் ஈவன் பிளாஸ் வெளியிட்டுள்ளார். அக்கா எவ்லீக்ஸ் படி, மூன்றாவது ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 9R ஆக அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

 ஒன்பிளஸ் 9E

டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஒன்பிளஸ் 9R இன் இருப்பை வெளிப்படுத்தும் சோர்ஸ் கோடின் ஸ்கிரீன் ஷாட்டை பதிவிட்டு அவர் இந்த தகவலை இப்போது லீக் செய்துள்ளார். இதற்கிடையில், மூன்றாவது ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் பெயரை ஒன்பிளஸ் 9E எனக் கசியவிட்ட மற்றொரு டிப்ஸ்டர் மேக்ஸ் ஜம்போர், ஒன்பிளஸ் 9R இன் பிளாஸ் கூற்றைச் சந்தேகிக்கிறார்.

ஒன்பிளஸ் 8 சீரிஸ் போன்கள் மீது அதிரடி விலை குறைப்பு.. இனி இது தான் விலை..ஒன்பிளஸ் 8 சீரிஸ் போன்கள் மீது அதிரடி விலை குறைப்பு.. இனி இது தான் விலை..

ஒன்பிளஸ் 9R சிறப்பம்சம் (எதிர்பார்க்கப்படும்)

ஒன்பிளஸ் 9R சிறப்பம்சம் (எதிர்பார்க்கப்படும்)

ஒன்பிளஸ் 9 ஆர் அல்லது ஒன்பிளஸ் 9 இ அல்லது ஒன்பிளஸ் 9 லைட் மாடல், 6.5 இன்ச் 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்பிளேவை ஆதரிக்கும். இது ஸ்னாப்டிராகன் 690 சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புடன் வெளிவரும். ஒன்பிளஸ் 9 இ அல்லது ஒன்ப்ளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சாரை கொண்டிருக்கும்.

5,000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போன் டூயல் பின்புற கேமரா அமைப்பை கொண்டிக்கும், இதில் 8 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் கேமரா இரண்டாவது கேமராவாக இடம்பெறும். இந்த ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவரும். ஒன்பிளஸ் 9 தொடர் வெளியீட்டுத் தேதியை ஒன்பிளஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மார்ச் வெகு தொலைவில் இல்லை என்பதால், கூடுதல் தகவலுக்கு காத்திருக்கலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
OnePlus 9E or OnePlus 9R or OnePlus 9 Lite to launch as alongside with OnePlus 9, 9 Pro : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X