டிசைன் செம! .! அட்டகாசமான கேமராக்கள்.! பட்டைய கிளப்பும் ஒன்பிளஸ் 9.!

|

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் சற்று உயர்வான விலையில் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. விலைக்கு தகுந்தபடி

அனைத்து அம்சங்களும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் இருக்கும்.

எதிர்பார்த்த ஒன்பிளஸ்

விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்த ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் முக்கிய வடிவமைப்பு கூறுகளை வெளிப்படுத்தும் புகைப்படம் ஒன்று ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ன்றே அடுத்த ஒன்பிளஸ் 9 சாதனமும் ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளேவுடன் வரும்

ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன்களை போன்றே அடுத்த ஒன்பிளஸ் 9 சாதனமும் ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்பதை CAD அடிப்படையிலான ரெண்டர் புகைப்படம் வெளிப்படுத்துகிறது.

BSNL வழங்கும் இலவச சிம் கார்டை பெறுவது எப்படி? நிபந்தனைகளுக்கு உட்பட்டது..

அடிப்படையில் ஒன்பிளஸ் 9

வெளியான புகைப்படம் அடிப்படையில் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை வெளியிட்டது 91 மொபைல்ஸ் வலைத்தளம் ஆகும்.

புகைப்படம் உடன் சில

ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் புகைப்படம் உடன் சில விவரக்குறிப்புகளை பரிந்துரைக்கும் ஒரு லிஸ்டும் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. அதன்படி புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வரும் 2021 மார்ச் மாதம் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் 9 சாதனத்தில் செங்குத்தாக வடிவமைக்கப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் இரண்டு கேமரா சென்சார்கள் பெரிய சுற்றளவு கொண்டுள்ளன. கேமரா சென்சார்களுக்கு அடுத்து எல்.ஈ.டி ஃபிளாஷ் ஒன்றும் தெரிகிறது.

ன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்

அதேபோல் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் முன்னதாக வெளியான ஸ்மார்ட்போன்களில் இருந்த அலெர்ட் ஸ்லைடர் மற்றும் வால்யூம் ராக்கரைத் தக்க வைத்துக் கொள்ளும் என்பது போல் தெரிகிறது. பின்பு இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஹெட்ஜாக் இல்லாமல் வெளியாகும் என்று லீக் ஆன ரெண்டர் புகைப்படம் தெரிவிக்கிறது.

அடிப்படையில்

மேலும் வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஒன்பிளஸ் 9 சாதனம் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீதத்துடன் 6.55-இன்ச் அளவிலான டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் மற்றும் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 875 எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

சாதனம் 65 வாட் பாஸ்ட்

குறிப்பாக ஒன்பிளஸ் 9 சாதனம் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. பின்பு லூபான் LE2117 என்ற மாடல் நம்பரைக் கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் தரச்சான்றிதழ் தளமான கீக்பெஞ்ச்சில் காணப்பட்டுள்ளது. இது சீன ஊடகத்தளமான வெய்போ பயனர் ஒருவரால் கவனிக்கப்பட்ட இந்த மாடல் நம்பர் ஒன்பிளஸ் 9 உடன் தொடர்புடையது ஆகும்.

டையாக கொண்டு வெளிவரும். பின்பு

இந்த ஒன்பிளஸ் 9 சாதனம் ஆனது கண்டிப்பாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். பின்பு 8ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 875 soc சிப்செட் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

மற்றும் புகைப்படங்கள்

வெளியான லீக்ஸ் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் எல்லாம் ஒருபக்கம் இருக்க, மறுகையில் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனை பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ விவரங்களையும் ஒன்பிளஸ் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus 9 render leak gives us our first look at the 2021 flagship and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X