ஒன்பிளஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!

|

ஒன்பிளஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்கள் கேமரா, நெட்வொர்க் மற்றும் system மேம்பாடுகளுடன் புதிய ஆக்ஸிஜன்ஓஎஸ் அப்டேட்-ஐ பெறுகின்றன. அதாவது தற்சமயம் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 11.2.6.6 அப்டேட்-ஐ பெற்றுள்ளன. இந்த அப்டேட் பயனர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

 ஒன்பிளஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9

குறிப்பாக இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்தன. மேலும் ஆப்பிள் ஐபோன்களுக்கு போட்டியாக இந்த இரண்டு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுமே

அதேபோல் இரண்டு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுமே ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்களின் விலை சற்று உயர்வாக இருந்தாலும் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் உள்ளன என்றுதான் கூறவேண்டும். இப்போதுஒன்பிளஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

பலூனில் இதையெல்லாம் கட்டி பறக்க விடுவாங்களா? யூடியூபர் கைது.! வைரல் வீடியோ.!பலூனில் இதையெல்லாம் கட்டி பறக்க விடுவாங்களா? யூடியூபர் கைது.! வைரல் வீடியோ.!

ஒன்பிளஸ் 9 அம்சங்கள்

ஒன்பிளஸ் 9 அம்சங்கள்

டிஸ்பிளே: 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid OLED டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்)
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
20: 9 என்ற திரைவிகிதம்
கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி
ஒன்பிளஸ் கூல் ப்ளே என்று கூறப்படும் மல்டி லேயர் கூலிங் சிஸ்டம் ஆதரவு
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
செல்பி கேமரா: 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமரா
பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
வார்ப் சார்ஜ் 65டி பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
டால்பி அட்மோஸ் அம்சம் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6,
ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ்,
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
என்எப்சி
எடை: 183 கிராம்

ஒன்பிளஸ் 9 ப்ரோ அம்சங்கள்

ஒன்பிளஸ் 9 ப்ரோ அம்சங்கள்

டிஸ்பிளே: 6.7-இன்ச் கியூஎச்டி பிளஸ் அமோலேட் டிஸ்ப்ளே (1,440x3,216 பிக்சல்)
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ஸ்மார்ட் 120 ஹெர்ட்ஸ் அம்சத்தை இயக்கும் தொழில்நுட்ப ஆதரவைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே
ரியர் கேமரா: 48எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர்+ 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 11
பேட்டரி: 4500 எம்ஏஎச்
வார்ப் சார்ஜ் 65டி மற்றும் வார்ப் சார்ஜ் 50 வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6,
ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ்,
என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்.
எடை:197 கிராம்

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus 9 Pro, OnePlus 9 Received OxygenOS 11.2.6.6 Update: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X