சரியா 12 மணிக்கு- இன்று தொடங்கும் ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9ஆர் விற்பனை: ஆனா இவர்களுக்கு மட்டும்தான்!

|

ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் முதல் விற்பனை தொடங்குகிறது. இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கும் இந்த விற்பனையானது அமேசான் பிரைம் உறுப்பினர்கள் மற்றும் ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 9 ஆர் மாடலானது பட்ஜெட் விலை கிடைக்கும் சிறந்த சாதனமாகும்.

ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9ஆர்

ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9ஆர்

ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் ஒன்பிளஸ் 9 மற்றும் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன்களானது பல்வேறு சுவாரஸ்ய அம்சங்களை கொண்டிருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் கிடைக்கும் தன்மை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

அமேசான் பிரைம், ரெட் கேபிள் கிளப்

அமேசான் பிரைம், ரெட் கேபிள் கிளப்

ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போன்கள் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு இன்று மதியம் 12 மணிமுதல் அமேசான் மூலமாக வாங்க கிடைக்கும். பிரைம் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி மதியம் 12 மணிமுதல் கிடைக்கும். அதேபோல் ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் இரண்டு ஸ்மார்ட்போன்களையும் ஒன்பிளஸ் வலைதளம் மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர் பயன்பாட்டில் மதியம் 12 மணிமுதல் வாங்கலாம்.

ரெட் கேபிள் கிளப், அமேசான் பிரைம்

ரெட் கேபிள் கிளப், அமேசான் பிரைம்

எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ பரிவரத்தனைகள் மூலம் அமேசான் மற்றும் ஒன்பிளஸ்.இன் மூலம் வாங்கும்போது ரூ.3000 தள்ளுபடி கிடைக்கிறது. இதேபோல் ஒன்பிளஸ் 9ஆர் சாதனம் வாங்கும்போது ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகள் மூலம் ஒன்பிளஸ்.இன் வாங்கும்போது 10 சதவீத கேஷ்பேக், ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 30 வரை எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும்போது ஆறுமாதம் வரை விலை இல்லா இஎம்ஐ சலுகை வழங்கப்படுகிறது.

14 முறை சவாரி செய்ய மறுக்கப்பட்ட பார்வையற்ற பெண்.. 1.1 மில்லியன் செலுத்த நீதிமன்றம் UBERக்கு உத்தரவு..14 முறை சவாரி செய்ய மறுக்கப்பட்ட பார்வையற்ற பெண்.. 1.1 மில்லியன் செலுத்த நீதிமன்றம் UBERக்கு உத்தரவு..

ஒன்பிளஸ் 9 அம்சங்கள்

ஒன்பிளஸ் 9 அம்சங்கள்

 • டிஸ்பிளே: 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid OLED டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்)
 • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
 • 20: 9 என்ற திரைவிகிதம்
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
 • ரேம்: 8ஜிபி/12ஜிபி
 • மெமரி: 128ஜிபி/256ஜிபி
 • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11
 • சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி
 • ஒன்பிளஸ் கூல் ப்ளே என்று கூறப்படும் மல்டி லேயர் கூலிங் சிஸ்டம் ஆதரவு
 • ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
 • செல்பி கேமரா: 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமரா
 • பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
 • வார்ப் சார்ஜ் 65டி பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
 • டால்பி அட்மோஸ் அம்சம் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
 • 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6,
 • ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ்,
 • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
 • என்எப்சி
 • எடை: 183 கிராம்
 • ஒன்பிளஸ் 9 விலை

  ஒன்பிளஸ் 9 விலை

  8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது.

  12ஜிபி ரேம் மற்றும் 246ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.54,999-ஆக உள்ளது.

  ஒன்பிளஸ் 9ஆர் அம்சங்கள்

  ஒன்பிளஸ் 9ஆர் அம்சங்கள்

  • டிஸ்பிளே: 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே (1,080x2,400 பிக்சல்)
  • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  • ரேம்:8ஜிபி/12ஜிபி
  • மெமரி:128ஜிபி/256ஜிபி
  • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஒசி
  • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11
  • ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார்
  • செல்பீ கேமரா: 16எம்பி
  • பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
  • 65 வாட் வார்ப் சார்ஜிங் ஆதரவு
  • வைஃபை 6, ப்ளூடூத் 5.1,
  • ஜிபிஎஸ், என்எப்சி
  • ஒன்பிளஸ் 9ஆர் விலை

   ஒன்பிளஸ் 9ஆர் விலை

   8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999-ஆக உள்ளது

   12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.43,999-ஆக உள்ளது

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus 9, Oneplus 9R on sale to Amazon Prime and Red Cable Members starting today at 12 noon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X