ஒன்பிளஸ் 9 வரிசையில் புதிய மாடல் இது தானா? 'ஒன்பிளஸ் 9 லைட்' என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?
இந்த ஆண்டு ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து முடித்துவிட்டு, அடுத்த ஆண்டிற்கான வேலையை மும்முரமாகச் செய்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் அதன் ஸ்மார்ட்போன் வரிசையில் அடுத்த ஆண்டு ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, இப்பொழுது ஒன்பிளஸ் 9 சீரிஸில் மூன்றாவது மாடல் ஒன்று அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 9 லைட்
ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு நிச்சயமாக ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்பொழுது, இந்த வரிசையில் மூன்றாவது மாடலாக ஒன்பிளஸ் 9 லைட் என்ற புதிய லைட் வெர்ஷன் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்று வதந்திகள் வெளிவந்துள்ளது. இது அடுத்த ஆண்டு 9 சீரிஸின் கீழ் வெளியாகக்கூடும் என்று தெரிகிறது.

ஒன்பிளஸ் 9 தொடரில் மூன்றாவது ஸ்மார்ட்போன்
ஒன்பிளஸ் 9 தொடரில் மூன்றாவது ஸ்மார்ட்போன் மாடலாக மிட்-ரேஞ் செக்டாரில் இந்த போன் வெளிவரும் என்ற புதிய அறிக்கை ஆண்ட்ராய்டு சென்ட்ரல் வழியாக வெளிவந்துள்ளது. இது ஒன்பிளஸ் 8T மாடலுடன் நிறைய ஒத்துப்போகும் என்று தெரிகிறது. இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 865 உடன் வெளிவரக்கூடும் என்றும், மேலும் இது 8T க்கு ஒத்ததாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?
ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் சாதனம் 65W பாஸ்ட் சார்ஜிங்கையும் கொண்டிருக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் சுமார் $ 600 (தோராயமாக ரூ. 44,000) என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று அறிக்கை கூறுகிறது. இந்த சாதனம் இந்தியாவில் இந்த விலை வரம்பில் எஸ் 20 எஃப்இ மற்றும் பிக்சல் 4 ஏ உடன் போட்டியிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 9 லைட் போனுக்கும் 8T க்கும் என்ன வேறுபாடு?
ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் அல்லது 120 ஹெர்ட்ஸ் அமோலேட் டிஸ்பிளேவுடன், பிளாஸ்டிக் பேக் பேனலுடன் வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. கேமரா அம்சத்தை பொறுத்தவரை ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் 8T க்கு ஒத்ததாக இருக்கக்கூடும். ஹார்டுவேர் அனைத்தும் அப்படியே இருக்கும், இதில் உள்ள ஒரே மாற்றமாக இதன் டிசைன் வடிவமைப்பு மட்டுமே மாற்றத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications