ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றிய சுவாரசிய தகவல்.. மொத்தம் 3 மாடலா?

|

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த வரிசையில் ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9 லைட் ஆகிய மூன்று மாடல்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் சில முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

ஒன்பிளஸ் 9

ஒன்பிளஸ் 9 இன் முக்கிய விவரங்கள் AIDA64 பெஞ்ச்மார்க் பக்கத்தில் கசிந்துள்ளது. டெக்ராய்டர் பகிர்ந்த ஸ்கிரீன் ஷாட்களில், ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் 'LE2117' என்ற மாடல் எண்ணுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புடன் வருகிறது.

ஒன்பிளஸ் 9

ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன், 6.55' இன்ச் டிஸ்பிளே அம்சத்துடன் 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவுடன் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில், இது 48 மெகாபிக்சல் அல்லது 50 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமராவை கொண்டிருக்கலாம் என்றும், மற்ற சென்சார்கள் பற்றிய விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

யாரும் சொல்லிக்கொடுக்காத 10 ஸ்மார்ட்போன் தந்திரங்கள்! இப்போதே ட்ரை செய்யுங்கள்!யாரும் சொல்லிக்கொடுக்காத 10 ஸ்மார்ட்போன் தந்திரங்கள்! இப்போதே ட்ரை செய்யுங்கள்!

இது 16

இது 16 மெகாபிக்சல் கொண்ட முன்பக்க கேமராவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தகால அறிக்கைகள் பரிந்துரைத்துள்ளனர் OnePlus 9 அம்சம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஒரு 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா, ஒரு 20MP அதி வைட் ஆங்கிள் கேமரா, மற்றும் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் ஒரு 12MP டெலிஃபோட்டோ கேமரா மூலம் மீண்டும் ஒரு மூன்று கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 9

ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் 4,500 எம்ஏஎச் பேட்டரியுடன்இருப்பதை AIDA64 பெஞ்ச்மார்க் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புதிய சாதனத்தில் 65W ஃபாஸ்ட் சார்ஜர் இருக்கலாம் என்று முந்தைய வதந்திகள் தெரிவித்தன. ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய மற்ற தகவல்களை வரும் வாரத்தில் நாம் பார்க்கலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
OnePlus 9 leaked specs show Snapdragon 888 with 4,500mAh battery : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X