Home
Mobile

OnePlus 9 விலை இப்போது மலிவானது.. உண்மையை சொன்னால், OnePlus 9RT ஐ விட விலை குறைவு..

OnePlus நிறுவனம் அதன் புதிய OnePlus 10 Pro சாதனத்தை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்து அதன் விற்பனையும் துவங்கியுள்ள நிலையில், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த OnePlus 9 ஸ்மார்ட் போன் மாடலின் விலை இப்போது OnePlus 9RT ஸ்மார்ட் போனை விட மலிவானதாகக் குறைந்துள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு ஹாசல்பிளாட் இயங்கும் கேமரா அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு சாதனைகளின் தற்போதைய விலை என்ன? சமீபத்திய போனின் விலை என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

Hasselblad பிராண்டட் கேமராக்கள் உள்ள மிரட்டலான ஸ்மார்ட் போன் இது

Hasselblad பிராண்டட் கேமராக்கள் உள்ள மிரட்டலான ஸ்மார்ட் போன் இது

OnePlus 9 ஸ்ம்ர்ட் போனில் Hasselblad பிராண்டட் கேமராக்கள் உள்ளன. அதேபோல், தெரியாதவர்களுக்கு OnePlus 9RT ஸ்மார்ட் போனில் இந்த Hasselblad பிராண்டட் கேமராக்கள் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. பொருட்படுத்தாமல், OnePlus 9RT மிகவும் அழகான படங்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒன்பிளஸ் 10 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நாட்டில் ஒன்பிளஸ் 9 சீரிஸின் விலையை ஒன்பிளஸ் நிறுவனம் குறைத்துள்ளது.

புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட் போனின் விலை என்ன தெரியுமா?

புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட் போனின் விலை என்ன தெரியுமா?

இதன் படி, ஒன்பிளஸ் ரசிகர்கள் இப்போது ஒன்பிளஸ் 9 சீரிஸின் ஸ்மார்ட் போன் மாடல்களை முன்பை விட குறைந்த விலைக்கு வாங்கி பயன்பெற முடியும். சமீபத்தில், ஒன்பிளஸ் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட புது வரவான ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட் போனின் விலை பற்றி பார்க்கையில், இதன் 8ஜிபி + 128ஜிபி மாடல் ரூ.66,999 விலையிலும், இதன் 12ஜிபி + 256ஜிபி மாடல் ரூ. 71,999 விலை முதல் தொடங்கப்படுகிறது. OnePlus 10 Pro அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு OnePlus 9 மற்றும் OnePlus 9RT விலை எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது என்று பார்ப்போம்.

இந்தியாவில் OnePlus 9 விலை

இந்தியாவில் OnePlus 9 விலை

OnePlus இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், OnePlus 9 ஆனது 8GB + 128GB மற்றும் 12GB + 256GB உள்ளிட்ட இரண்டு மெமரி வகைகளில் ரூ.40,599 மற்றும் ரூ.45,599 விலைக்கு வழங்குகிறது. இது அஸ்ட்ரல் பிளாக், ஆர்க்டிக் ஸ்கை மற்றும் விண்டர் மிஸ்ட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. வாங்குவதற்கு SBI கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், பயனர்கள் கூடுதலாக ரூ.5,000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். மேலும், முதல் ஆறு மாதங்களுக்கு இலவச Spotify பிரீமியம் சந்தாவும் கிடைக்கிறது. நிறுவனத்தால் வழங்கப்படும் (OnePlus இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி) ரூ. 4,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸும் உள்ளது.

இந்தியாவில் OnePlus 9RT விலை

இந்தியாவில் OnePlus 9RT விலை

OnePlus 9RT இந்தியாவில் 8GB + 128GB மாடல் ரூ.42,999 விலையிலும் மற்றும் அதன் 12GB + 1256GB மாடல் ரூ.46,999 என்ற விலையிலும் இரண்டு மெமரி வகைகளிலும் கிடைக்கிறது. இது ஹேக்கர் பிளாக் மற்றும் நானோ சில்வர் உள்ளிட்ட இரண்டு வண்ணங்களில் வருகிறது. SBI கார்டைப் பயன்படுத்தி, சாதனத்தை ரூ. 4,000 கூடுதல் தள்ளுபடியில் வாங்கலாம். OnePlus இந்த ஸ்மார்ட்போனுடன் ஆறு மாதங்களுக்கு இலவச Spotify பிரீமியம் சந்தாவையும் வழங்குகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஒரே குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC மூலம் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனத்தின் மீது ரூ. 24,000 வரை சலுகையா?

ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனத்தின் மீது ரூ. 24,000 வரை சலுகையா?

OnePlus பயனர்களுக்கு சக்திவாய்ந்த அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் OnePlus நிறுவனம் இந்த சிப்செட்டை இரண்டு மாடல்களிலும் பயன்படுத்தியுள்ளது. OnePlus 9RT கேமரா OIS ஆதரவுடன் வருகிறது, ஒன்பிளஸ் 9 உடன் இது இல்லை. எனவே இந்த சாதனத்திற்கும் செல்வதற்கு முன் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. சமீபத்திய ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனத்தை வாங்குவதற்கு நிறுவனம் எக்ஸ்செஞ் சலுகையையும் வழங்கியுள்ளது. அதிகப்படியாக இந்த சலுகையின் மூலம், உங்கள் எக்ஸ்சேஞ் சாதனத்திற்கு ரூ. 24,000 வரை கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

Best Mobiles in India

English summary
OnePlus 9 Is Now Cheaper In India OnePlus 10 Pro Price Specification And Exchange Offer Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X