OnePlus 8T ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் தெரியுமா? வெளியான டிப்ஸ்டர் தகவல்!

|

ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்காகத் தான் OnePlus ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் முன்னதாக, இந்த மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் சிறிது தாமதத்தைச் சந்தித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது ஒன்பிளஸ் 8T எப்போது அறிமுகமாகும் என்ற டிப்ஸ்டர் தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போனானது, ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனை விட வித்தியாசமான கேமரா அமைப்புடன் புதிய வடிவமைப்பைக் கொண்டிருப்பதாக்க லீக்ஸ் தகவல்கள் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன், ஸ்னாப்டிராகன் 865 SoC ஆல் இயக்கப்படுகிறது மற்றும் இதில் 65W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் 14ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று டிப்ஸ்டர் இஷான் அகர்வால் தெரிவித்த தகவல்களை மைஸ்மார்ட் பிரைஸ் இன்று பகிர்ந்துள்ளது. எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாகத் தயாரிப்பில் சிறிது தாமதங்கள் ஏற்பட்ட காரணத்தினால் அறிமுகம் தேதியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்று டிப்ஸ்டர் குறிப்பிடுகிறார்.

போனில் இருந்த 400 ஆபாச படங்கள்.. மனைவி கொடுத்த புகார்! கைது செய்யப்பட்ட வங்கி காசாளர்!போனில் இருந்த 400 ஆபாச படங்கள்.. மனைவி கொடுத்த புகார்! கைது செய்யப்பட்ட வங்கி காசாளர்!

ஒன்பிளஸ் நிகழ்வும் ஆன்லைனில் தானா?

ஒன்பிளஸ் நிகழ்வும் ஆன்லைனில் தானா?

எப்படியிருந்தாலும், ஒன்பிளஸ் 8T கடந்த ஆண்டிலிருந்து தாமதமாகத் தொடங்கப்படுவதைக் காணும் பொழுது, ஒன்ப்ளஸ் 7T கடந்த செப்டம்பர் மாதத்திலேயே வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியாக இருந்தாலும் ஒன்பிளஸ் 8T வெளியீட்டு நிகழ்வு தொடர்பாக ஒன்பிளஸிலிருந்து எந்த அறிவிப்புகளும் இன்னும் வரவில்லை. சூழ்நிலையைப் பொறுத்தவரை, அடுத்த ஒன்பிளஸ் நிகழ்வு நிச்சயம் ஆன்லைன் மூலமே நடத்தப்படும்.

OnePlus 8T எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம்

OnePlus 8T எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம்

  • 6.55' இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
  • 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம்
  • ஆக்ஸிஜன் ஓஎஸ் 11 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11
  • ஸ்னாப்டிராகன் 865+ சிப்செட்
  • 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
  • குவாட் ரியர் கேமரா அமைப்பு
    • குவாட் ரியர் கேமரா அமைப்பு
    • 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா
    • 16 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
    • 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
    • 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார்
    • 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
    • 65W ஃபாஸ்ட் சார்ஜிங்
    • 4,500 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
OnePlus 8T Tipped to Launch on October 14: Expected Specifications and More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X