ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?
ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தனித்துவமான அமசங்களுடன் இந்த சாதனம் வெளிவந்தது. இந்நிலையில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

அதாவது ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனுக்கு OxygenOS 11.0.9.9 அப்டேட் கிடைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதுவும் தற்போது வட அமெரிக்காவில் உள்ள சில ஒன்பிளஸ் 8டி பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் உள்ள ஒன்பிளஸ் 8டி பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ள OxygenOS 11.0.9.9 அப்டேட் ஆனது மென்பொருள் மற்றும் கேமராவின் மேம்பாடுகளை வழங்குகிறது எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனம் கடந்த அக்டோபர் 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது.மேலும் 6.55 இன்ச் அளவிலான புல் எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) Fluid AMOLED டிஸ்ப்ளே கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
ஒன்பிளஸ் 8டி சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி ஸ்னாப்டிராகன் 850 SoC மற்றும் அட்ரினோ 650 ஜி.பீ.யூ சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் வீடியோ கேம் உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன்.
ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனில் மிகவும் முக்கியமானது கேமராக்கள் தான். அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம்48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 முதன்மை சென்சார் (எஃப் / 1.7 லென்ஸ்) + 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 481 சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் (எஃப் / 2.2 லென்ஸ்) + 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் + 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. செல்பீக்களுக்காக, டிஸ்பிளேவின் மேல் இடது மூலையில் உள்ள ஹோல் பஞ்ச் கட்அவுட்டில் எஃப் / 2.4 லென்ஸுடன் சிங்கிள் 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் உள்ளது.

5 ஜி, 4 ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, க்ளோனாஸ் மற்றும் சார்ஜ் செய்வதற்கான யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் இந்த மொத்த அமைப்பும் ஒரு 4,500 எம்ஏஎச் பேட்டரியால் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது பேட்டரியை வெறும் 39 நிமிடங்களில் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் அளவீட்டில் 160.7x74.1x8.4 மிமீ மற்றும் 188 கிராம் எடை கொண்டு வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications