Oneplus 8T Pro இந்த ஆண்டு வெளிவராதா? இந்த தகவல் உண்மையா தானா?

|

ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு, ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7T , ஒன்பிளஸ் 7T ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன் என்று வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக ஒரே வெளியீட்டில் அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த ஆண்டு, நிறுவனம் ஒன்பிள் 8T ஸ்மார்ட்போனை மட்டும் வரவிருக்கும் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யுமென்று தெரிகிறது.

ஒன்பிளஸ் 8T ப்ரோ இந்த ஆண்டு வெளிவராதா?

ஒன்பிளஸ் 8T ப்ரோ இந்த ஆண்டு வெளிவராதா?

அப்படியானால், ஒன்பிளஸ் 8T ப்ரோ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளிவராதா? என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கக்கூடும். நமக்கு தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி வரவிருக்கும் ஒன்பிளஸ் 8T ப்ரோ ஸ்மார்ட்போன், ஒன்பிளஸ் 8T உடன் அறிமுகம் செய்யப்படாமல் அடுத்த ஆண்டு வெளிவரும்படி நிறுவனம் திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் பரவி வருகிறது.

கபாப்2 (Kebab2) என்றால் என்ன தெரியுமா?

கபாப்2 (Kebab2) என்றால் என்ன தெரியுமா?

டிவிட்டரில் மேக்ஸ் ஜே என்ற லீக்ஸ் தகவலை வெளியிடும் நம்பகமான பிரமுகர் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறார். அவரின் டிவிட்டர் பக்கத்தில் 'கபாப்2 (Kebab2)' என்ற படத்தில் ஒரு பெரிய சிவப்பு அடித்தல் தடம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 8T ப்ரோ ஸ்மார்ட்போனிற்கும் கபாப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் யோசிக்கலாம், காரணம் இருக்கிறது. வாருங்கள் உண்மையைத் தெரிந்துகொள்ளலாம்.

நூற்றுக்கணக்கான மம்மிகள் எகிப்தில் கண்டுபிடிப்பு! எதிர்பாராத விதமாக அவிழும் மர்ம முடிச்சு!நூற்றுக்கணக்கான மம்மிகள் எகிப்தில் கண்டுபிடிப்பு! எதிர்பாராத விதமாக அவிழும் மர்ம முடிச்சு!

ஒன்பிளஸ் T ப்ரோ சீரிஸை நிறுத்த போகிறதா?

ஒன்பிளஸ் T ப்ரோ சீரிஸை நிறுத்த போகிறதா?

ஆரம்பத்தில் கபாப் என்பது வரவிருக்கும் ஒன்பிளஸ் 8T இன் குறியீட்டுப் பெயரைக் குறித்தது. அதேபோல், இந்த இடத்தில் கபாப் 2 என்பது ஒன்பிளஸ் 8T ப்ரோ ஸ்மார்ட்போனை குறிக்கிறது என்று நம்பப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது "T ப்ரோ" தொடரை நிறுத்திவிட்டு வழக்கமான "T" பதிப்பை மட்டும் இனிமேல் தொடங்கக்கூடும் என்பது போன்றும் சில தகவல்கள் கசிந்துள்ளது. இது எவ்வளவு உண்மை என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை.

மனதில் ஒரு ஓரமாய் வைத்திருங்கள்

மனதில் ஒரு ஓரமாய் வைத்திருங்கள்

இப்போது, ​​வரவிருக்கும் ஒன்பிளஸ் 8T ப்ரோ ஸ்மார்ட்போனுடன் T ப்ரோ தொடர் முடிவு பெறக்கூடும் என்பதற்கு இன்னும் எந்த ஆதாரமும் இல்லை, எனவே நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை இதை நாம் நமது மனதில் ஒரு ஓரமாய் வைத்திருந்தால் போதுமானது. முந்தைய ஆண்டில் ஒன்பிளஸ் 7T ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு மிகவும் குறைவான உற்சாகமே இருந்தது, இதனால் இந்த முறை ஒன்ப்ளஸ் சரியானதைச் செய்கிறது என்று நினைக்கலாம்.

திருடிய போனை திரும்பக் கொடுத்த திருடன்: அதுக்கு சொன்ன காரணம் இருக்கே- ஓனரே ஷாக் ஆகிட்டாரு!திருடிய போனை திரும்பக் கொடுத்த திருடன்: அதுக்கு சொன்ன காரணம் இருக்கே- ஓனரே ஷாக் ஆகிட்டாரு!

ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன், கசிவுகள் மற்றும் வதந்திகளின் படி "கபாப்" என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 865+ சிப்செட் உடன், 120 ஹெர்ட்ஸ் 6.55' இன்ச் லீகுய்ட் அமோலேட் டிஸ்ப்ளேயுடன், நான்கு கேமரா கொண்ட குவாட் கேமரா அமைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா மற்றும் ஸ்டோரேஜ் விபரம்

கேமரா மற்றும் ஸ்டோரேஜ் விபரம்

இதில் 48 எம்பி கேமரா, 16 எம்பி கேமரா அல்ட்ரா வைடு, 5 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படும்.இது தவிர, ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் பேஸ் வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று வதந்திகள் பரவி வருகிறது.

ஆண்ட்ராய்டு 11 விரைவாக கிடைக்குமா?

ஆண்ட்ராய்டு 11 விரைவாக கிடைக்குமா?

மேலும் ஒன்பிளஸ் 7T, எப்படி ஆண்ட்ராய்டு 10 புதுப்பிப்பை எவ்வளவு விரைவாகப் பெற்றதோ, அதேபோல் ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பை விரைவாகப் பெறும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கிறது.

Best Mobiles in India

English summary
Oneplus 8T Pro May Not Launch This Year Leakster Shared Kebab2 Crossed Image In Twitter : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X