Just In
- 7 hrs ago
ஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்? என்னென்ன எதிர்பார்க்கலாம்.!
- 7 hrs ago
புதிய ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் மார்ச் 1ம் தேதி அறிமுகம்..
- 7 hrs ago
விலை இவ்வளவா?- Huawei P40 4G சிறந்த அம்சங்களோடு அறிவிப்பு!
- 7 hrs ago
Redmi AirDots 3 TWS இயர்போன்ஸ் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்.!
Don't Miss
- News
மாசி மகம் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்த துர்கா ஸ்டாலின் - வெற்றிக்கு வழிபாடு
- Automobiles
ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி மார்ச் 3ல் தொடக்கம்... விலையை கேட்டால் நீங்களும் புக் பண்ணீருவீங்க...
- Movies
movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் "கால்ஸ் " - திரைவிமர்சனம்
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Lifestyle
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
6.55-இன்ச் டிஸ்பிளேவுடன் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் ஆனது வழக்கமான ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8ப்ரோ மாடல்களை விட சில மாற்றங்களையும் மேம்பாடுகளையும் கொண்டுள்ளது. குறிப்பாக 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் விகித டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.42,999 என்றும் அதன் 12 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.45,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன் உடன் ஒப்பிடும்போது ஒரு பெரிய பேட்டரியும், ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பிற்கு பதிலாக குவாட் ரியர் கேமரா அமைப்பும் உள்ளது.

குறிப்பாக அக்வாமரைன் க்ரீன் மற்றும் லூனார் சில்வர் நிறங்களில் இந்த ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா வலைத்தளம் வழியாக வரும் அக்டோபர் 17-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது அமேசான் கிரேட் இந்தியா சிறப்பு விற்பனை தொடக்கமாகும் நாள். இதன் அர்த்தம் இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 16-ம் தேதி நடக்கும் ப்ரைம் மெம்பர்களுக்கான ஆரம்ப அணுகல் விற்பனையிலும் வாங்க கிடைக்கும்.
அசத்தும் தொழில்நுட்பத்துடன் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி சாதனங்கள் அறிமுகம்.!

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 11 மூலம் இயங்குகிறது. மேலும் 6.55 இன்ச் அளவிலான புல் எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) Fluid AMOLED டிஸ்ப்ளே கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஒன்பிளஸ் 8டி சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி ஸ்னாப்டிராகன் 850 SoC மற்றும் அட்ரினோ 650 ஜி.பீ.யூ சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் வீடியோ கேம் உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன்.

இந்த ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனில் மிகவும் முக்கியமானது கேமராக்கள் தான். அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 முதன்மை சென்சார் (எஃப் / 1.7 லென்ஸ்) + 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 481 சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் (எஃப் / 2.2 லென்ஸ்) + 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் + 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. செல்பீக்களுக்காக, டிஸ்பிளேவின் மேல் இடது மூலையில் உள்ள ஹோல் பஞ்ச் கட்அவுட்டில் எஃப் / 2.4 லென்ஸுடன் சிங்கிள் 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் உள்ளது.

5 ஜி, 4 ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, க்ளோனாஸ் மற்றும் சார்ஜ் செய்வதற்கான யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் இந்த மொத்த அமைப்பும் ஒரு 4,500 எம்ஏஎச் பேட்டரியால் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது பேட்டரியை வெறும் 39 நிமிடங்களில் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் 15 நிமிடங்களில் 58 சதவீதம் வரை சார்ஜ் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் அளவீட்டில் 160.7x74.1x8.4 மிமீ மற்றும் 188 கிராம் எடையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190