Home
Mobile

இன்று அறிமுகமாகும் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன்.! லைவ் ஸ்ட்ரீம் எத்தனை மணிக்கு?

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புத்தம் புதிய ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் மாடலை இன்று அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சரியாக இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஒரு மெய்நிகர் நிகழ்வின் வழியாக இந்த ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அறிமுகமாகும் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன்.! லைவ் ஸ்ட்ரீம்?

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்ஃபோன் வரிசையில் இந்த புதிய மாடல் வர இருக்கிறது. அண்மையில் வெளியான தகவலின்படி வரவிருக்கும் ஒன்பிளஸ் 8டி மாடலில் 65வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே அம்சங்கள் இடம்பெறலாம்.

குறிப்பாக இந்த ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் வெளியிடவில்லை என்றாலும் கூட இது ஒன்பிளஸ் 8 சீரிஸிலேயே மிகவும் விலை உயர்ந்த ஒரு மாடலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இன்று அறிமுகமாகும் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன்.! லைவ் ஸ்ட்ரீம்?

மேலும் ஒன்பிளஸ் வேர்ல்ட் மற்றும் யூடியூப்பில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும் மெய்நிகர் நிகழ்வின் மூலம் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் இன்று இரவு 7:30 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும். பின்பு இந்த சாதனம் அக்வாமரைன் க்ரீன் மற்றும் லூனார் சில்வர் நிறங்களிலும் வெளியாகும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்னவென்றால் 6.55-இன்ச் Fluid AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் விகிதம், 91.1 சதவிகிதம் என்கிற ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடனும் வெளியாகலாம்.

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

இன்று அறிமுகமாகும் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன்.! லைவ் ஸ்ட்ரீம்?

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 586 முதன்மை சென்சார் + 16எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் உட்பட நான்கு கேமராக்களை எதிர்பார்க்கலாம். அதேபோல் 16எம்பி செல்பீ கேமராவுடன் இந்த சாதனம் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல இந்த புதிய ஒன்பிளஸ் 8டி மாடலும் அமேசான்.இன் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா வலைதளம் வழியாக விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
OnePlus 8T Launch: Price in India, features, specs, Live Streaming and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X