OnePlus 8T சைபர்பங்க் 2077 லிமிடெட் எடிஷன் விரைவில் அறிமுகம்.. என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான ஒன்பிளஸ் 8T சாதனத்தை இந்த மாத தொடக்கத்தில் உலக சந்தைகளில் அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து இப்போது நிறுவனம் ஒன்பிளஸ் 8T சைபர்பங்க் 2077 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை நவம்பர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது.

OnePlus 8T சைபர்பங்க் 2077 லிமிடெட் எடிஷன்
வெளியீட்டுத் தேதியை நிறுவனம் வெய்போ போஸ்ட் வழியாக அறிவித்துள்ளது. ஒன்பிளஸ் 8T இன் புதிய எடிஷன் சீனாவில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டர் தகவலின் படி புதிய ஸ்மார்ட்போன் விளிம்புகளில் மஞ்சள் நிறத்தின் சிறிய மஞ்சள் நிற சைபர்பங்க் பிராண்டிங்கையும் கொண்டுள்ளது. இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ஒன்ப்ளஸ் உடன் CD ப்ராஜெக்ட் கூட்டு
இந்த ஒன்ப்ளஸ் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன், கேம் டெவலப்பர் CD ப்ராஜெக்டுடன் (CD Projekt) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. சைபர்பங்க் 2077 என்பது வரவிருக்கும் அதிரடி ரோல்-பிளேயிங் வீடியோ கேம் ஆகும். அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய சைபர்பங்க் 2077 கேம் வரும் டிசம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுமென்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிக எதிர்பார்ப்பை இந்த கேம் இந்த ஆண்டில் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை என்னவாக இருக்கும்?
இதற்கு முன்பு வெளியாகியுள்ள கசிவுகளின் தகவல் படி, ஒன்பிளஸ் 8T சைபர்பங்க் 2077 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 கொண்ட ஸ்டோரேஜ் அம்சத்துடன் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஒன்பிளஸ் 8T சைபர்பங்க் 2077 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் அறிமுகம் விலை 3,999 யுவான் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ. 43,600 ஆகும்.

ஒன்பிளஸ் 8T போலவே சிறப்பம்சம்
வடிவமைப்பு மாற்றங்களைத் தவிர, விவரக்குறிப்புகள் முற்றிலுமாக ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போனின் நிலையான மாடல் போலவே இருக்கக்கூடும். ஒன்பிளஸ் 8T, 6.55' இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் இயங்குகிறது. இதில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 65W வார்ப் சார்ஜிங் உடைய 4,500 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு
ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன், குவாட்-கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இதில் 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 16 மெகா பிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, 5 மெகா பிக்சல் மைக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி மோனோக்ரோம் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகா பிக்சல் கொண்ட சோனி IMX471 செல்ஃபி சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications