Home
Mobile

உடனே முந்துங்கள்., 2-வது விற்பனை மே 29: OnePlus 8 அதிரடி தள்ளுபடியோடு!

மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன் மாடலின் இரண்டாவது விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பச்சை, கருப்பு உள்ளிட்ட சில நிறங்களில் வெளிவந்துள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,999-ஆக உள்ளது. பின்பு 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.2,000-வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் நோ காஸ்ட் இஎம்ஐ உள்ளிட்ட சில சலுகைகளும் இந்த ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனுக்கு வழங்பட்டுள்ளது. பின்பு ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

6.55' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் ஃபுலுயிட் அமோல்ட் டிஸ்ப்ளேயுடன் கூடிய 1080x2400 பிக்சல்கள் பன்ச் ஹோல் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,

20: 9 டிஸ்பிளே ரேட்ஸியோ

3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC

8 ஜிபி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 4X ரேம் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 என் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் உள்ளது

48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 கொண்ட பிரைமரி கேமரா 16 மெகாபிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா என மூன்று பின்புற கேமராவை கொண்டுள்ளது

16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் கொண்ட செல்ஃபி கேமரா

5ஜி மற்றும் 4ஜி எல்டிஇ வைஃபை 6 ப்ளூடூத் வி 5.1 ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் என்எப்சி யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் வார்ப் சார்ஜ் 30T (5V / 6A) 4,300 எம்ஏஎச் பேட்டரி.

ஒன்பிளஸ் 8 ப்ரோ டிஸ்பிளே வசதி

ஒன்பிளஸ் 8 ப்ரோ டிஸ்பிளே வசதி

ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.78-இன்ச் குவாட் எச்டி பிளஸ் AMOLEDடிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1440x3168 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் 19:8:9 என்ற திரைவிகிதம், 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 1200nits பிரைட்நஸ், எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு, உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் 8ப்ரோ கேமரா வசதி

ஒன்பிளஸ் 8ப்ரோ கேமரா வசதி

இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி IMX689சென்சார் + 48எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 8எம்பிடெலிபோட்டோ லென்ஸ் + 5எம்பி கலர் ஃபில்டர் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஒன்பிளஸ் 8 ப்ரோ சிப்செட்

ஒன்பிளஸ் 8 ப்ரோ சிப்செட்

ஒன்பிளஸ் 8ப்ரோ சிப்செட் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் அட்ரினோ 650ஜி.பி.யு கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் இந்த ஸ்மார்ட்போன் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஒன்பிளஸ் 8ப்ரோ பேட்டரி

ஒன்பிளஸ் 8ப்ரோ பேட்டரி

இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம்

ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம்

ஒன்பிளஸ் 8 5 ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சாதனத்தின் முதல் விற்பனை சமீபத்தில் அமேசானில் தொடங்கப்பட்டது. வேகமாக விற்பனையான இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாவது விற்பனை மே 29 அன்று தொடங்க உள்ளது. இரண்டாவது விற்பனைக்கு முன்பே முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்ப்ளஸ் தனது ஸ்மார்ட்போன் விற்பனையை ஊரடங்கு கட்டுப்பாடு காலத்தில் தள்ளுபடியோடு அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் 8: சலுகைகள்

ஒன்பிளஸ் 8: சலுகைகள்

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன் அமேசான் மூலம் வாங்கப்படுவதன் மூலம், ​​வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பே பேலன்ஸ் வடிவத்தில் ரூ.1000 தள்ளுபடியுடன் கூப்பன் கிடைக்கும். இந்த சலுகை ப்ரீபெய்ட் ஆர்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும். எஸ்பிஐ கார்டைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகை மே 29 முதல் பொருந்தும் என்று அமேசான் அறிவித்துள்ளது. தொலைபேசியை வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கும் ரூ.6,000 சலுகைகள் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 8 smartphone next sale announced on may 29 with offers: pre-booking, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X