Oneplus 8 மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இருக்கா? இல்லையா? இதான் பதில்.!

|

ஒன்பிளஸ் நிறுவனம் நேற்று புதிய ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் ரசிகர்கள் பல நாட்களாகக் காத்திருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிமுகம் நேற்று நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் ஒன்பிளஸ் நிறுவனம் 2 புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுடன், புதிய வயர்லெஸ் சார்ஜ்ர் சாதனத்தையும் அறிமுகம் செய்து வைத்துள்ளது. ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களானது, முந்தைய ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ, ஒன்பிளஸ் 7T மற்றும் ஒன்பிளஸ் 7T ப்ரோ ஆகின ஒன்பிளஸ் 7 சீரிஸ் சாதனங்களின் வாரிசாகும், இந்த போன்களை விட அதிக அம்சங்களுடன் தற்பொழுது ஒன்பிளஸ் 8 சீரிஸ் களமிறக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த சாதனத்தின் விலை நிர்ணயம் சற்று அதிகமாக தான் இருக்கிறது.

அதிக விலைக்கு பின்னால் உள்ள உண்மை என்ன?

அதிக விலைக்கு பின்னால் உள்ள உண்மை என்ன?

ஒன்பிளஸ் நிறுவனம் முதல் முறையாக ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5ஜி தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அதிநவீன தொழில்நுட்பங்களை இயக்குவதற்கான கூடுதல் வன்பொருள் மாற்றங்களை ஒன்பிளஸ் மேற்கொண்டுள்ளது என்பதால், ஒன்பிளஸ் நிர்ணயம் செய்துள்ள விலைக்குப் பின்னால் நியாயமான காரணங்கள் இருக்கிறது என்பதே உண்மை.

பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய ராட்சஸ உயிரனம் கண்டுபிடிப்பு! வியப்பில் ஆழ்த்திய உருவம்!பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய ராட்சஸ உயிரனம் கண்டுபிடிப்பு! வியப்பில் ஆழ்த்திய உருவம்!

வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இருக்கா? இல்லையா?

வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இருக்கா? இல்லையா?

இப்பொழுது பலருடைய சந்தேகம் என்னவென்றால் ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடலில் கிடைக்கும் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜிங் என்ற வயலெஸ் அம்சம், ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனிலும் கிடைக்கிறதா என்பது தான், இந்த கேள்விக்கான நேரடி சோகமான பதில் ஒன்பிளஸ் 8 மாடல் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இல்லை, ஒன்பிளஸ் நிறுவனத்தின் ப்ரோ மாடலான ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடலில் மட்டும் தான் முதல் முறையாக ஒன்பிளஸ் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பு

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பு

இருப்பினும் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனாக தான் இருக்கிறது, அப்படி ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனில் என்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம். ஒன்பிளஸ் 8 மாடல் ஸ்மார்ட்போனில் 12 ஜிபி ரேம் வேரியண்ட் மாடல் உள்ளது,இந்த ஸ்மார்ட்போன் சமீபத்திய குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸருடன் வந்துள்ளது. ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன் மாடலானது ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்தைக் கொண்டுள்ளது.

ரூ.200-க்கு அட்டகாச ஆஃபர்.! ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்களின் சூப்பர் திட்டங்கள்.!ரூ.200-க்கு அட்டகாச ஆஃபர்.! ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்களின் சூப்பர் திட்டங்கள்.!

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

  • 6.55' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் ஃபுலுயிட் அமோல்ட் டிஸ்ப்ளேயுடன் கூடிய 1080x2400 பிக்சல்கள் பன்ச் ஹோல் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
  • 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20: 9 டிஸ்பிளே ரேட்ஸியோ
  • 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC
  • 8 ஜிபி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 4X ரேம்
  • ஸ்டோரேஜ் மற்றும் கேமரா விபரம்

    ஸ்டோரேஜ் மற்றும் கேமரா விபரம்

    • 128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 என் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் உள்ளது
    • 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 கொண்ட பிரைமரி கேமரா
    • 16 மெகாபிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
    • 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா என மூன்று பின்புற கேமராவை கொண்டுள்ளது
    • 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் கொண்ட செல்ஃபி கேமரா
    • Whatsapp சாட்களை மறைப்பது எப்படி? உங்கள் ரகசிய சாட்களை இனி யாரும் பார்க்க வேண்டாம்.!Whatsapp சாட்களை மறைப்பது எப்படி? உங்கள் ரகசிய சாட்களை இனி யாரும் பார்க்க வேண்டாம்.!

      இணைப்பு மற்றும் பேட்டரி விபரம்

      இணைப்பு மற்றும் பேட்டரி விபரம்

      5ஜி மற்றும் 4ஜி எல்டிஇ
      வைஃபை 6
      ப்ளூடூத் வி 5.1
      ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
      என்எப்சி
      யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
      வார்ப் சார்ஜ் 30T (5V / 6A)
      4,300 எம்ஏஎச் பேட்டரி

      ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் விலை விபரங்கள்

      ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் விலை விபரங்கள்

      ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலுக்கு தோராயமாக ரூ.53,200 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் மாடலான 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் சுமார் ரூ.60,800 என்ற விலையை எட்டியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் க்ளாஸியல் கிறீன், இன்டெர்ஸ்டெல்லர் க்ளோ மற்றும் ஓனிக்ஸ் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

      Google CEO இந்தியாவிற்காக மீண்டும் கொடுத்த நன்கொடை எவ்வளவு தெரியுமா?Google CEO இந்தியாவிற்காக மீண்டும் கொடுத்த நன்கொடை எவ்வளவு தெரியுமா?

      ஒன்பிளஸ் வலைதளத்தில் முன்பதிவு துவங்கியது

      ஒன்பிளஸ் வலைதளத்தில் முன்பதிவு துவங்கியது

      இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் இன்று முதல் துவங்கிவிட்டது, இங்கிலாந்தில் வரும் ஏப்ரல் 21 முதல் மற்றும் அமெரிக்காவில் ஏப்ரல் 29 முதல் ஒன்பிளஸ் 8 விற்பனைக்குக் கிடைக்கிறது. இருப்பினும், ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் விற்பனை விபரங்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை, இந்திய விற்பனை குறித்த தகவல்கள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Oneplus 8 Smartphone Does It Have Wireless Charging Feature : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X