ஒன்பிளஸ் 8 சீரிஸ் போன்கள் மீது அதிரடி விலை குறைப்பு.. இனி இது தான் விலை..

|

ஒன்பிளஸ் 8 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு பின்னர் இத்தனை நாட்களுக்கு பிறகு நிறுவனம் இப்போது ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது விலை குறைப்பை அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் 8 டி மீதான விலை குறைப்பு

ஒன்பிளஸ் 8 டி மீதான விலை குறைப்பு

ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒன்பிளஸ் 8 டி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் மாடலின் விலை இப்போது ரூ.39,999 க்கு குறைந்துள்ளது. இதற்கு முன்னர் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 42,999 இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் 8 டி போனின் 12 ஜிபி ரேம் வேரியண்ட் இப்போது ரூ. 42,999 விலையில் கிடைக்கிறது. இதன் முந்தைய அசல் விலை ரூ .45,999 ஆகும்.

ஒன்பிளஸ் 8 ப்ரோ மீதான விலை குறைப்பு

ஒன்பிளஸ் 8 ப்ரோ மீதான விலை குறைப்பு

அதேபோல், ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ .54,999 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் முந்தைய அசல் விலை ரூ.50,999 என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் 8 புரோ போனின் 12 ஜிபி வேரியண்ட் மாடல் இப்போது வெறும் ரூ.55,999 விலையில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 59,999ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.47 திட்டம் அறிமுகம்: 28 நாட்கள் வேலிடிட்டி.! என்னென்ன நன்மைகள் தெரியுமா?பிஎஸ்என்எல் ரூ.47 திட்டம் அறிமுகம்: 28 நாட்கள் வேலிடிட்டி.! என்னென்ன நன்மைகள் தெரியுமா?

ஒன்பிளஸ் 8 மீதான விலை குறைப்பு

ஒன்பிளஸ் 8 மீதான விலை குறைப்பு

மறுபுறம், ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 44,999 விலையிலிருந்து ரூ.41,999 ஆக குறைந்துள்ளது. அதேபோல், இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் இப்போது ரூ.44,999 ஆக குறைந்துள்ளது. இதன் அசல் விலை ரூ .44,999 ஆகும்.

ஒன்ப்ளஸ் டிவி மாடல்களுக்கு சலுகை

ஒன்ப்ளஸ் டிவி மாடல்களுக்கு சலுகை

இப்போது ஒன்பிளஸ் 8 ப்ரோ, ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 டி வாங்குவதில் வாடிக்கையாளர்கள் கூடுதல் உடனடி தள்ளுபடியைப் பெறலாம். மார்ச் 10, 2021 வரை எஸ்பிஐ கிரெடிட் கார்டு சலுகை ஒன்ப்ளஸ் டிவி மாடல்களுக்கும் பொருந்தும். ஒன்பிளஸ் டிவி க்யூ 1 வாங்கும்போது, ​​வாடிக்கையாளர்கள் உடனடி தள்ளுபடியாக ரூ. 5,000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
OnePlus 8 Series Gets a Price Cut In India, Know The Recent Price and Offers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X