ஆட்டம் ஆரம்பம்: ஒன்பிளஸ் 8 விற்பனை வருகிற 4 ஆம் தேதி!

|

ஒன்பிளஸ் 8 விற்பனை வருகிற 4 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனைக் குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.

மே 29 விற்பனைக்கு வரவிருந்தன

மே 29 விற்பனைக்கு வரவிருந்தன

அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இணையதம் வழியே மே 29 விற்பனைக்கு வரவிருந்தன, ஆனால் இதன் விற்பனை மாற்றுத் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதேசமயத்தில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு விற்பனை அறிவித்த பிறகே வாங்க முடியும் நிலை ஏற்பட்டது.

உற்பத்தி ஆலையில் ஆறு தொழிலாளர்களுக்கு கொரோனா

உற்பத்தி ஆலையில் ஆறு தொழிலாளர்களுக்கு கொரோனா

அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒப்போ உற்பத்தி ஆலையில் ஆறு தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அங்கே வேலைகள் நிறுத்தப்பட்டது. மேலும் அந்த ஆலையில் தான் ஒன்பிளஸ் தனது ஸ்மார்ட்போன்களை அசெம்பிள் செய்வதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக நிறுத்தப்பட்ட உற்பத்தியே இந்தியாவில் ஒன்பிளஸ் 8 தொடர் ஸ்மார்போன்களின் விற்பனைத் திட்டத்தை பாதித்திருக்கக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகின.

சும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்!சும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்!

ஜூன் 4 ஆம் தேதி மீண்டும் விற்பனை

ஜூன் 4 ஆம் தேதி மீண்டும் விற்பனை

இந்த நிலையில் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன் ஜூன் 4 ஆம் தேதி மீண்டும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை அமேசானில் நண்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. கொரோனா வைரஸ் பரவுதல் மற்றும் பூட்டுதல் காரணமாக உற்பத்தி குறைவாக இருந்ததால் விற்பனை ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ப்ளஸ் 8 ப்ரோ விற்பனை குறித்து தகவல் இல்லை

ஒன்ப்ளஸ் 8 ப்ரோ விற்பனை குறித்து தகவல் இல்லை

அதேபோல் ஒன்ப்ளஸ் 8 மட்டுமே அமேசானில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஒன்ப்ளஸ் 8 ப்ரோ குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் மாடலின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 8: விலை மற்றும் வெளியீட்டு சலுகைகள்

ஒன்பிளஸ் 8: விலை மற்றும் வெளியீட்டு சலுகைகள்

ஒன்பிளஸ் 8, 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ .41,999. 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ .44,999, 12 ஜிபி + 256 ஜிபி விருப்பத்தின் விலை ரூ .49,999. இந்த ஸ்மார்ட்போன்களானது ஜூன் 4 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசானில் ஜூன் 4 மதியம் 12 மணிக்கு இந்த போனை வாங்கலாம்.

ஒன்பிளஸ் 8 அறிமுக சலுகை

ஒன்பிளஸ் 8 அறிமுக சலுகை

இந்த ஸ்மார்ட்போனுக்கு அறிமுக சலுகையாக எஸ்பிஐ கார்டின் மூலம் இஎம்ஐ பயனர்களுக்கான சலுகை ரூ.2,000 தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்த பயனர்களுக்கு அமேசான் பே கேஷ்பேக்கா ரூ .1,000 வழங்குகிறது. அதேபோல், பெரும்பாலான முக்கிய வங்கிகளிடம் மூலம் வாங்குபவர்களுக்கு 12 மாதங்கள் வரை விலை இல்லாத இஎம்ஐ விருப்பம் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும்

இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும்

ஒன்பிளஸ் 8 ப்ரோ இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. உற்பத்தி நிலையத்தில் இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளதாக ஒன்பிளஸ் அறிவித்துள்ளது. எனவே ஒன்பிளஸ் 8 ப்ரோ விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 8 அம்சங்கள்

ஒன்பிளஸ் 8 அம்சங்கள்

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனில் இரட்டை சிம் (நானோ), ஆண்ட்ராய்டு 10 ஆக்ஸிஜன் ஓஎஸ், 6.55 இன்ச் முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்) அமோலேட் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் வரை புதுப்பிப்பு வீதம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் ஆகியவை மூலம் இயக்கப்படுகின்றன. அதேபோல் மைக்ரோ எஸ்டி மெமரி விரிவாக்க வசதியும் இதில் உள்ளது.

ஒன்பிளஸ் 8 டிரிபிள் ரியர் கேமரா

ஒன்பிளஸ் 8 டிரிபிள் ரியர் கேமரா

ஒன்பிளஸ் 8 டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் எஃப் / 1.75 லென்ஸுடன் 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 முதன்மை சென்சார், எஃப் / 2.4 மேக்ரோ லென்ஸுடன் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் மற்றும் எஃப் / 2.2 லென்ஸுடன் 16 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். அதோடு இந்த செல்ஃபிக்களுக்கான 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் மற்றும் எஃப் / 2.45 லென்ஸ் உள்ளது.

நீங்க பேஸ்புக்னா நாங்க கூகுள்: Vodafone idea-வில் கூகுள் முதலீடு?., உயரும் பங்குகள்!நீங்க பேஸ்புக்னா நாங்க கூகுள்: Vodafone idea-வில் கூகுள் முதலீடு?., உயரும் பங்குகள்!

4,300 எம்ஏஎச் பேட்டரி

4,300 எம்ஏஎச் பேட்டரி

ஸ்மார்ட்போன் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் இணைப்புடன் வருகிறது. சாதனம் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 8 4,300 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 8 Second Sale Starts on June 4 via Amazon: Price in India, Offers and More Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X