எதிர்பார்த்துக் காத்திருந்த OnePlus 8 Pro விற்பனை இன்று துவக்கம் - விலை மற்றும் சலுகை விபரம்!

|

ஒன்பிளஸ் நிறுவனம் இன்று இந்தியாவில் அதன் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையைத் துவங்குகிறது. அதிகாரப்பூர்வ அறிமுகமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று மதியம் 12 மணிக்கு முதல் ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனை அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைத்தளத்தில் துவங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்புச் சலுகை விபரங்களைப் பார்க்கலாம்.

ஒருவழியாக விரப்பணிக்கு வந்த OnePlus 8 Pro

ஒருவழியாக விரப்பணிக்கு வந்த OnePlus 8 Pro

இந்த ஸ்மார்ட்போன் மே 29 அன்று விற்பனைக்கு வரத் திட்டமிடப்பட்டது, கொரோனா ஊரடங்கு காரணத்தினாலும், தயாரிப்பு தாமதம் காரணத்தினாலும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இப்பொழுது தான் விற்பனைக்கு வருகிறது. கடந்த வாரம், ஒன்பிளஸ் நிறுவனம், முதன்மையான இந்த புதிய ஸ்மார்ட்போன் அதன் நாட்டில் "பெரும் தேவை" காரணமாக வரையறுக்கப்பட்ட யூனிட்கள் மட்டுமே கிடைக்கும் என்று அறிவித்தது.

ஒன்பிளஸ் 8 ப்ரோ சிறப்பு சலுகை

ஒன்பிளஸ் 8 ப்ரோ சிறப்பு சலுகை

ஒன்பிளஸ் 8 ப்ரோ ஏப்ரல் மாதத்தில் ஒன்பிளஸ் 8 உடன் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் 8 ப்ரோ இதுவரை நாட்டில் வாங்குவதற்குக் கிடைக்கவில்லை என்றாலும், ஒன்பிளஸ் 8 கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு முறை விற்பனைக்கு வந்து பல யூனிட்களை விற்பனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. எஸ்பிஐ கார்டு மற்றும் இஎம்ஐ மூலம் ரூ. 3,000 உடனடி தள்ளுபடியும், ரூ.6,000 மதிப்புள்ள ஜியோ சலுகையும் வட்டி இல்ல EMI விருப்பமும் கிடைக்கிறது.

ஏரியா 51 : ஒட்டுமொத்த அமெரிக்க அரசும் மறைக்க விரும்பிய ஒரு இடம்..!ஏரியா 51 : ஒட்டுமொத்த அமெரிக்க அரசும் மறைக்க விரும்பிய ஒரு இடம்..!

ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனை விலை

ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனை விலை

இந்தியாவில் ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனை விலை
இந்தியாவில் ஒன்பிளஸ் 8 ப்ரோவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் ரூ. 54,999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.அதேபோல், இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு வேரியண்ட் ஸ்மார்ட்போன் மாடல் ரூ. 59,999 என்ற விலையில் கிடைக்கிறது.

புதிய ஒன்பிளஸ் 8 ப்ரோ எங்கு வாங்கலாம்

புதிய ஒன்பிளஸ் 8 ப்ரோ எங்கு வாங்கலாம்

அமேசான் தளம் மற்றும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் இன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்குகிடைக்கிறது. குறிப்பிட்ட அளவு யூனிட்கள் மட்டுமே இந்த முதல் விற்பனையில் விற்பனைக்கு கிடைக்குமென்று நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஒன்பிளஸ் 8 ப்ரோ க்ளாஸியல் கிறீன், ஓனிக்ஸ் பிளாக் மற்றும் அல்ட்ராமரைன் ப்ளூ நிறத்தில் கிடைக்கிறது.

யாரும் சொல்லிக்கொடுக்காத 10 ஸ்மார்ட்போன் தந்திரங்கள்! இப்போதே ட்ரை செய்யுங்கள்!யாரும் சொல்லிக்கொடுக்காத 10 ஸ்மார்ட்போன் தந்திரங்கள்! இப்போதே ட்ரை செய்யுங்கள்!

ஒன்பிளஸ் 8 ப்ரோ சிறப்பம்சம்

ஒன்பிளஸ் 8 ப்ரோ சிறப்பம்சம்

 • 6.78' இன்ச் 1440x3168 பிக்சல்கள் கொண்ட QHD பிளஸ் டிஸ்பிளே
 • 120Hz ரெஃபிரெஷ்ஷிங் ரேட் கொண்ட பன்ச் ஹோல் அமோலேட் டிஸ்பிளே
 • ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்
 • 128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 சேமிப்பு வேரியண்ட்
 • ஆக்ஸிஜன் OS உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
 • கேமரா மற்றும் பிற அம்சங்கள்

  கேமரா மற்றும் பிற அம்சங்கள்

  • 48 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
  • 8 மெகாபிக்சல் கொண்ட டெலிஃபோட்டோ கேமரா
  • 48 மெகாபிக்சல் கொண்ட வைடு ஆங்கில் கேமரா
  • 5 மெகாபிக்சல் கொண்ட கேமரா
  • 16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபீ கேமரா
  • இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 5 ஜி, 4 ஜி எல்டிஇ
  • வைஃபை 6
  • புளூடூத் V 5.1
  • ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி
  • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
  • 4,510 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
OnePlus 8 Pro To Go On Sale Today Via Amazon Price, Specification And Offers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X