ஐயன் மேன் கையில் இருக்கும் இந்த சூப்பர் ஸ்மார்ட்போன் என்ன மாடல் தெரியுமா?

|

ராபர்ட் டவுனி ஜூனியரை தெரியாமல் யாரும் இருக்க மாட்டார்கள், அந்த அளவிற்கு உலகம் முழுவதும் இவர் பிரபலம். இவரை ராபர்ட் டவுனி ஜூனியர் என்று கூறினால் கூட சிலருக்கு அடையாளம் தெரியாமல் இருக்கலாம். ஆனால், டோனி ஸ்டார்க் என்று சொன்னால் அனைவரும் தெரியும். ஏன் ஐயன் மேன் என்று சொன்னால் குழந்தைகளுக்குக் கூட இவரை அடையாளம் தெரியும்.

ஐயன் மேன் கையில் இருக்கும் அந்த சூப்பர் ஸ்மார்ட்போன்

ஐயன் மேன் கையில் இருக்கும் அந்த சூப்பர் ஸ்மார்ட்போன்

இப்பொழுது ஹாட் நியூஸ் என்னவென்றால் ராபர்ட் டவுனி ஜூனியர், அதாவது நம்ம ஐயன் மேன் கையில் இருக்கும் அந்த சூப்பர் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலாக இருக்குமோ என்ற சந்தேகம் தான் தற்பொழுது எழுந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ஒரு திரைப்பட படப்பிடிப்பின் போது இந்த புகைப்படம் கிளிக் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் பிராண்டின் அம்பாசிட்டர்

ஒன்பிளஸ் பிராண்டின் அம்பாசிட்டர்

ஒன்பிளஸ் அதன் 8 சீரிஸ் தொடர் ஸ்மார்ட்போன்களுடன் அடுத்த மாதத்தில் அதன் தயாரிப்பு வரிசையைப் புதுப்பிக்கத் தயாராக உள்ளது. கடந்த மாதங்களில் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன் பற்றிய சில தகவல்கள் வலைத்தளங்களில் கசிந்தது. ஆனால் சமீபத்திய கசிவு ஒன்பிளஸ் பிராண்டின் அம்பாசிட்டரான ராபர்ட் டவுனி ஜூனியரிடமிருந்து வந்துள்ளது.

இந்த VPN பயன்பாடுகள் உங்கள் போனில் உள்ளதா? அப்போ உடனே Uninstall செய்யுங்கள்!இந்த VPN பயன்பாடுகள் உங்கள் போனில் உள்ளதா? அப்போ உடனே Uninstall செய்யுங்கள்!

ஸ்மார்ட்போனின் கேமரா

ஸ்மார்ட்போனின் கேமரா

ஹாலிவுட் நடிகரின் இந்த புதிய புகைப்படம், வரவிருக்கும் ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடலாக இருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது. முன்னர் பார்த்த ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் கசிவுகளுடன் பொருந்தக்கூடிய வகையில், அவர் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனின் கேமரா செங்குத்தாக சீரமைக்கப்பட்ட கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகப் புகைப்படத்தில் தெரிகிறது.

மூன்று ஸ்மார்ட்போன் மாடலாக ஒன்பிளஸ் 8 சீரிஸ்

மூன்று ஸ்மார்ட்போன் மாடலாக ஒன்பிளஸ் 8 சீரிஸ்

முந்தைய தகவலின்படி, ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மூன்று ஸ்மார்ட்போன் மாடலாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக ஒன்பிளஸ் நிறுவனம் லைட் வெர்ஷன் ஸ்மார்ட்போனை களமிறக்கத் தயாராகி வருகிறது. இந்த லைட் வெர்ஷன் ஸ்மார்ட்போன் நிலையான ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடல்களுடன் இணைகிறது.

ரூ.4,000-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ Z1X.! உடனே முந்துங்கள்.!ரூ.4,000-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ Z1X.! உடனே முந்துங்கள்.!

வயர்லெஸ் சார்ஜிங் இருக்கிறதா?

வயர்லெஸ் சார்ஜிங் இருக்கிறதா?

ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஹை-வேரியண்ட் ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், புதிய 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதக் காட்சி டிஸ்பிளே மற்றும் 5 ஜி இணைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் முதல் முறையாக ஒன்பிளஸ் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் சேவையையும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது அறிமுகம் தெரியுமா?

எப்போது அறிமுகம் தெரியுமா?

ஒன்பிளஸ் நிறுவனம், இந்த புதிய ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களான ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 லைட் மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை ஏப்ரல் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி ஆமைபோல நடக்காதே எனக் கூறவேண்டாம்.! 37,000 கிமீ பயணித்த அடிப்பட்ட ஆமை.! விஞ்ஞானிகள் பிரமிப்பு.!இனி ஆமைபோல நடக்காதே எனக் கூறவேண்டாம்.! 37,000 கிமீ பயணித்த அடிப்பட்ட ஆமை.! விஞ்ஞானிகள் பிரமிப்பு.!

பொறுத்திருக்க வேண்டும்

பொறுத்திருக்க வேண்டும்

ஆனால், ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் இன்னும் சில கூடுதல் விவரங்கள் நமக்குத் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 8 Pro Spotted In Robert Downey Jr Hands : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X