Home
Mobile

குறிப்பிட்ட சலுகைகளுடன் இன்று விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன்.!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இன்று மதியம் 12மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் 10சதவிகிதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும். மேலும் ஜியோ நிறுவனம் சார்பில் கேஷ்பேக் சலுகை மற்றும்
குறிப்பிட்ட சலுகைகளும் கிடைக்கும்.

ஒன்பிளஸ் 8ப்ரோ

ஒன்பிளஸ் 8ப்ரோ

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.54,999-விலையிலும், பின்பு 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.59,999-விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் 8ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 8ப்ரோடிஸ்பிளே வசதி

ஒன்பிளஸ் 8ப்ரோடிஸ்பிளே வசதி

ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.78-இன்ச் குவாட் எச்டி பிளஸ் AMOLEDடிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1440x3168 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் 19:8:9 என்ற திரைவிகிதம், 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 1200nits பிரைட்நஸ், எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு, உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் 8ப்ரோ கேமரா வசதி

ஒன்பிளஸ் 8ப்ரோ கேமரா வசதி

இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி IMX689சென்சார் + 48எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் +
8எம்பிடெலிபோட்டோ லென்ஸ் + 5எம்பி கலர் ஃபில்டர் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ
கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஒன்பிளஸ் 8ப்ரோ சிப்செட்

ஒன்பிளஸ் 8ப்ரோ சிப்செட்

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் அட்ரினோ 650ஜி.பி.யு கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ
ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் இந்த ஸ்மார்ட்போன்
இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4500எம்ஏஎச் பேட்டரி

4500எம்ஏஎச் பேட்டரி

இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

6.55' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் ஃபுலுயிட் அமோல்ட் டிஸ்ப்ளேயுடன் கூடிய 1080x2400 பிக்சல்கள் பன்ச் ஹோல் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20: 9 டிஸ்பிளே ரேட்ஸியோ
3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC
8 ஜிபி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 4X ரேம்
128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 என் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் உள்ளது
48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 கொண்ட பிரைமரி கேமரா
16 மெகாபிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா என மூன்று பின்புற கேமராவை கொண்டுள்ளது
16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் கொண்ட செல்ஃபி கேமரா
5ஜி மற்றும் 4ஜி எல்டிஇ
வைஃபை 6
ப்ளூடூத் வி 5.1
ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
என்எப்சி
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
வார்ப் சார்ஜ் 30T (5V / 6A)
4,300 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
OnePlus 8 Pro Sale Starts Today In India Price Offers And More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X