OnePlus 8 Pro: அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஒன்பிளஸ் நிறுவனம் மிகவும் எதிர்பார்த் ஒன்பிளஸ் 8ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை தற்போது அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அடேங்கப்பா என்று சொல்ல வைக்கும் விலையில் தான் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 8ப்ரோ
ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு,நீலம்,பசுமை போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது. மேலும் இதனுடன்ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன், வயர்லெஸ் இயர்பட்ஸ் உள்ளிட்ட சாதனங்களையும் அறிமுகம் செய்துள்ளது. மேலும்
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்உடன் அட்ரினோ 650ஜி.பி.யு வசதிகளுடன் வெளிவந்துள்ளன.

அட்டகாசமான டிஸ்பிளே வசதி
ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.78-இன்ச் குவாட் எச்டி பிளஸ் AMOLEDடிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1440x3168 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் 19:8:9 என்றதிரைவிகிதம், 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 1200nits பிரைட்நஸ், எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு, உள்ளிட்ட
ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா வசதி
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி IMX689சென்சார் + 48எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 8எம்பிடெலிபோட்டோ லென்ஸ் + 5எம்பி கலர் ஃபில்டர் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும்
16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு வசதி
ஒன்பிளஸ்; 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 8ஜிபி/12ஜிபி ரேம் வசதி மற்றும் 128ஜபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதிஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் அட்ரினோ 650ஜி.பி.யு கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ
ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் இந்த ஸ்மார்ட்போன் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி வசதி
இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலைஇருக்காது. மேலும் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வியக்கவைக்கும் விலை
இந்திய மதிப்பில்...
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.68,400-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.76,000-ஆக உள்ளது.
இங்கிலாந்தில் ஏப்ரல் 21 முதல் மற்றும் அமெரிக்காவில் ஏப்ரல் 29 முதல் வாங்குவதற்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications