நான்கு ரியர் கேமரா வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 8 ப்ரோ.!
ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன் அனைத்தும் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெருகிறது. மேலும் இந்நிறுவனம்
விரைவில் தனது புதிய ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஒன்பிளஸ் 8ப்ரோ
தற்சமயம் ஆன்லைனில் ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது,அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறுசிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அட்டகாசமான டிஸ்பிளே
வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மற்ற ஸ்மார்ட்போன்களை இந்த சாதனத்தின் டிஸ்பிளே சற்று வித்தயசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேமிப்பு வசதி
இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு
அந்நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட சிப்செட் வசதி
ஒன்பிளஸ் 7தொடர் ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்ற அதே சிப்செட் வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்படி ஒன்பிளஸ் 8 ப்ரோ சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும்.

கேமரா வசதி
ஒன்பிளஸஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

பேட்டரி வசதி
ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே வீடியோ, வீடியோ கேம் உள்ளிட்ட வசதிகளுக்கு இந்த சாதனம் அருமையாக இருக்கும். மேலும் 50வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவரும்.


Click it and Unblock the Notifications