குஷியான வாடிக்கையாளர்கள்: ஒன்ப்ளஸ் 8 ப்ரோ விற்பனை தேதி அறிவிப்பு!

|

ஒன்ப்ளஸ் 8 விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது ஒன்ப்ளஸ் 8 ப்ரோ விற்பனை தேதி குறித்த தகவல் லீக் ஆகியுள்ளது.

ஒன்ப்ளஸ் 8 சீரிஸ்

ஒன்ப்ளஸ் 8 சீரிஸ்

ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் இந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் இந்தத் தொடரில் ஒன்பிளஸ் 8 மாடல் மட்டுமே விற்பனைக்கு வந்தது. ஒன்பிளஸ் 8 ப்ரோ கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஒன்ப்ளஸ் 8 ப்ரோ விற்பனை தேதி

ஒன்ப்ளஸ் 8 ப்ரோ விற்பனை தேதி

இந்த நிலையில் ஒன்ப்ளஸ் 8 ப்ரோ விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் விற்பனை தேதி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒன்ப்ளஸ் 8 ப்ரோ ஜூன் 15 ஆம் தேதி விற்பனைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் இல்லாமல் பயணம்., சொன்னா கேட்கனும்., ஒரு நபரால் ஒரு பகுதியே லாக்: என்ன நடந்தது தெரியுமா?இ-பாஸ் இல்லாமல் பயணம்., சொன்னா கேட்கனும்., ஒரு நபரால் ஒரு பகுதியே லாக்: என்ன நடந்தது தெரியுமா?

அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இணையதளம்

அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இணையதளம்

அதேபோல் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இணையதளம் வழியே மே 29 ஆம் தேதி விற்பனைக்கு வரவிருந்தன, ஆனால் இதன் விற்பனை மாற்றுத் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

உற்பத்தி தாமதம்

உற்பத்தி தாமதம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு, கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒப்போ உற்பத்தி ஆலையில் ஆறு தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ஆலையில் தான் ஒன்பிளஸ் தனது ஸ்மார்ட்போன்களை அசெம்பிள் செய்கிறது. கொரோனா பாதிப்பால் அங்கு வேலை நிறுத்தப்பட்டது அதனால் ஒன்பிளஸ் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.

ஒன்பிளஸின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு மறுதொடக்கம்

ஒன்பிளஸின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு மறுதொடக்கம்

ஒன்பிளஸின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு மறுதொடக்கம் செய்யப்பட்ட உடனேயே ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனைக்கு வரும் என்று சமீபத்திய நாட்களில் செய்திகள் தெரிவித்தன. அதன்படி வருகிற 15 ஆம் தேதி ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 15 ஆம் தேதி விற்பனை

வருகிற 15 ஆம் தேதி விற்பனை

ஒன்பிளஸ் 8 ப்ரோ: விலைகள் மற்றும் விற்பனை குறித்து டிப்ஸ்டர் முகுல் சர்மா ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் கசிவு தகவல்களை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இந்த ட்வீட்டின் படி, ஒன்பிளஸ் 8 ப்ரோ 5 ஜி ஜூன் 15 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அதேபோல் ஒன்ப்ளஸ் 8 ப்ரோ வருகிற 15 ஆம் தேதி விற்பனைக்கு வரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்

இந்த சாதனம் 15 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் கிடைக்கும். 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளமைவு கொண்ட ஒன்பிளஸ் 8 ப்ரோ விலை இந்தியாவில் ரூ .54,999 ஆக இருக்கும். 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த சாதனம் ரூ.59,999 ஆக இருக்கும்.

onePlus 8 விலை

onePlus 8 விலை

onePlus 8 விலை 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மாடலுக்கு ரூ.41,999-க்கு கிடைக்கும். இந்த தொலைபேசியில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 49,999 என்ற விலையில் கிடைக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்ப்ளஸ் 8

ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்ப்ளஸ் 8

ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்ப்ளஸ் 8 ஆரம்பத்தில் அமேசான் மற்றும் ஒன்பிளஸ்.இன் மூலம் திங்களன்று கிடைக்கும். ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ், பார்ட்னர் ஸ்டோர்ஸ் மற்றும் பிற ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடமும் இந்த இரண்டு மாடல்களும் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

 ஒன்பிளஸ் 8 ப்ரோ: அம்சங்கள்

ஒன்பிளஸ் 8 ப்ரோ: அம்சங்கள்

ஒன்பிளஸ் 8 ப்ரோ குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 5 ஜி நெட்வொர்க் இணைப்பை வழங்கும், சாதனம் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு உள்ளமைவுடன் வருகிறது. இது 8MP சென்சார் மற்றும் 2MP சென்சார் மற்றும் 48MP பிரதான சென்சார் கேமரா கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக பஞ்ச்-ஹோல் 16 எம்.பி செல்பி கேமராவும் உள்ளது.

வாட்ஸ்அப்-ல் இப்படியொரு ஒரு பிரச்சனையா? உஷார் மக்களே.!வாட்ஸ்அப்-ல் இப்படியொரு ஒரு பிரச்சனையா? உஷார் மக்களே.!

ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்

ஒன்பிளஸ் 8 ப்ரோ 6.78 அங்குல AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் உடன் சாதனம் தனிப்பயன் ஆக்ஸிஜன் ஓஎஸ் ஆக வெளியிடப்பட்டுள்ளது. இந்த சாதனம் 30W வார்ட்ஸ் சார்ஜ் கொண்ட 4,510 எம்ஏஎச் பேட்டரி யூனிட்டையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus 8 Pro First Sale Starts June 15 in India: Price, Sale Offers and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X