Oneplus 8 ப்ரோ கேமரா ஆடைகள் மற்றும் திடப்பொருட்களின் உள் ஊடுருவி படம் எடுக்கிறதா?
Oneplus 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ள கலர் பில்டர் கேமரா ஆடைகள் மற்றும் திடமான பொருட்களுக்குள் ஊடுருவ முடியும் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது. உண்மையில் ஒன்பிளஸ் 8 ப்ரோவின் கலர் பில்டர் கேமரா ஆடைகள் மற்றும் திடமான பொருட்களுக்குள் இருப்பதை எப்படி காட்டுகிறது, இதற்குப் பின்னணியில் என்ன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்.

ஒன்பிளஸ் 8 ப்ரோ கேமரா
ஒன்பிளஸ் 8 ப்ரோ கேமராவில் உள்ள 5 மெகா பிக்சல் கொண்ட கேமரா சென்சார் சில திடமான பொருட்களுக்குள் ஊடுருவி புகைப்படங்களை எடுக்கிறது என்பது முதலில் XDA டெவெலப்பர்ஸ் மாக்ஸ் வெஇன்பாக் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 8 ப்ரோ கேமராவில் உள்ள கலர் மற்றும் IR பில்டர்களை பயன்படுத்தும் பொழுது இந்த நிகழ்வு நிகழ்கிறது. பிளாஸ்டிக் பொருட்க்களை மிக எளிதாக ஊடுருவி புகைப்படங்களை ஒன்பிளஸ் 8 ப்ரோ கிளிக் செய்கிறது.

பொருட்களுக்குள் ஊடுருவி படம் எடுக்கும் ஒன்பிளஸ் 8 ப்ரோ கேமரா
முதலில் இந்த ஒன்பிளஸ் 8 ப்ரோ கேமரா பிளாஸ்டிக் போன்ற திடப்பொருட்களை மட்டும் தான் ஊடுருவுகிறது என்று கருதப்பட்டது. பின்னர் ஒரு சந்தேகத்தில் அடைகளுக்குள்ளும் ஊடுருவுகிறதா என்று சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. சோதனையின் முடியில் சில நேரங்களில் சில ஆடைகளுக்குள்ளும் கேமரா ஊடுருவித் தெளிவாகப் புகைப்படம் எடுக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதற்கான சரியான கரணம் என்ன?
இதன்படி, AndroidPIT நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு விசாரணையில், ஒன்பிளஸ் 8 ப்ரோவின் பின்புறத்தில் உள்ள நான்காவது கேமரா, சில சரியான கேமரா மற்றும் வெளிச்ச நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பொழுது சில பொருட்களின் மேற்பரப்புகளை ஊடுருவிப் பார்க்க முடிகிறது என்பது தெரியவந்துள்ளது. இதற்கான சரியான கரணம் என்ன? X-ray கதிர்வீச்சுகள் கேமராவில் உள்ளதா என்ற உங்களுடைய பல கேள்விகளான பதில் இதோ.

IR மற்றும் ஒளியை உணரக்கூடிய சென்சார்கள்
நாம் பயன்படுத்தும் நிலையான கேமராக்களில் கலர் பில்டர்கள் உள்ளது, இந்த சென்சார்கள் இயற்கையாகவே வண்ணங்களைக் காட்டிலும் அவற்றைத் தாக்கும் ஒளியின் அளவைக் கண்டறியும், மேலும் புலப்படும் ஸ்பெக்ட்ரமுக்கு வெளியே இருக்கும் ஒளியைத் தடுக்க IR பில்டரையும் கொண்டிருக்கும். இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் ஒன்பிளஸ் IR மற்றும் ஒளியை உணரக்கூடிய இரண்டையும் அகற்றியதால் தற்பொழுது ஒன்பிளஸ் அதிக IR உணர்திறன் கொண்டதாகிவிட்டது.

உட்புறத்தைக் காட்டும் கேமரா
மேலும் அலைநீளத்தைப் பொறுத்து பொருட்கள் ஒளியை உறிஞ்சுவதால், ஒன்பிளஸ் 8 ப்ரோவின் கேமரா சில பொருட்களில் கண்ணாடி போல வெளிப்படையாக உட்புறத்தைக் காட்டுகிறது. இவை நமது கண்களுக்கு வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் கூட ஒன்பிளஸ் 8 ப்ரோவின் கேமராவில் தெளிவாகத் தெரிகிறது. ஆக போதுமான அகச்சிவப்பு ஒளி இருந்தால், அது பொருள் மீது பட்டு பிரகாசிக்கும் பொழுது அவற்றை வெளிப்படையா காட்டுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனிதனின் உடலை நிர்வாணமாகக் காட்டக் கூடியதா?
இப்பொழுது உங்களுடைய முக்கியமான கேள்வி இவை ஆடைகளுக்குள் ஊடுருவுகிறதா? மனிதனின் உடலை நிர்வாணமாகக் காட்டக் கூடியதா?என்றெல்லாம் பலருக்கும் தோன்றி இருக்கும். உண்மையில் இந்த ஒன்பிளஸ் 8 ப்ரோ கேமரா சில ஆடைகளை ஊடுருவி ஆடைக்குள் இருக்கும் பொருட்களை வெளிப்படையாகக் காட்டுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் சில ஆடைகளில் மட்டுமே ஊடுருவிக் காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடைக்குள் இதுவரை இதை மட்டுமே காட்டியுள்ள கேமரா
குறிப்பாக கருப்பு நிறம் கொண்ட மெல்லிய ஆடைகளில் மட்டுமே இவை தெளிவாக ஊடுருவிச் செயல்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆடைக்குள் இருக்கும் மனித உடலை இதுவரை இந்த கேமரா நிர்வாணமாகக் காட்டவில்லை என்றும், ஆடைக்குள் இருக்கும் வேறு பொருளை மட்டுமே முழுமையாகக் காட்டுகிறது என்று முதற்கட்ட சோதனையில் இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதை ஒன்பிளஸ் சரி செய்யுமா அல்லது என்ன நடவடிக்கையை எடுக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








