ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ விலை இதுதானா? கசிந்த தகவல் என்ன சொல்கிறது?

|

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வருகிற ஏப்ரல் 14ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. ஒன்பிளஸ் ரசிகர்கள் பல நாட்களாக காத்திருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

புதிய ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ

புதிய ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களானது, முந்தைய ஒன்பிளஸ் 7 , ஒன்பிளஸ் 7 ப்ரோ, ஒன்பிளஸ் 7T மற்றும் ஒன்பிளஸ் 7T ப்ரோ ஆகின சாதனங்களை விட அதிக அம்சங்களுடன் வேறெவரும் எண்பத்து நாம் அறிந்ததே, இதனால் இந்த சாதனத்தின் விலை நிர்ணயங்கள் அதிகமாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5ஜி தொழில்நுட்பம்

வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5ஜி தொழில்நுட்பம்

ஒன்பிளஸ் நிறுவனம் முதல் முறையாக ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5ஜி தொழில்நுட்ப ஆதரவை வழங்கவுள்ளது. இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை இயக்குவதற்கான கூடுதல் வன்பொருள் மாற்றங்களை ஒன்பிளஸ் மேற்கொண்டுள்ளது என்பதால், ஒன்பிளஸ் நிர்ணயம் செய்துள்ள விலைக்குப் பின்னால் நியாயமான காரணங்கள் இருக்கிறது என்பதே உண்மை.

மனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!மனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!

கூடுதல் அம்சங்கள் என்னவாக இருக்கும்?

கூடுதல் அம்சங்கள் என்னவாக இருக்கும்?

ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை இதில் கிடைக்கப்பெறும் கூடுதல் அம்சங்கள் என்னவாக இருக்குமென்றால், சமீபத்திய குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், 5ஜி ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ஃப்லூயிட் டிஸ்பிளே, எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 3.0 ஃபிளாஷ் மெமரி, வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 4,510 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கசிந்துள்ளது.

ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போனை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்

ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போனை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்

ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் மாடல் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.76,000 - 76,900 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வேரியண்ட் மாடல் சுமார் ரூ.83,500 - ரூ.84,400 என்ற விலைக்கு இடையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினசரி 3 ஜிபினு மொத்தம் 84 ஜிபி வேண்டுமா., அப்போ இதான் ஒரே வழி!தினசரி 3 ஜிபினு மொத்தம் 84 ஜிபி வேண்டுமா., அப்போ இதான் ஒரே வழி!

ஒன்பிளஸ் 8 மாடல் ஸ்மார்ட்போனை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்

ஒன்பிளஸ் 8 மாடல் ஸ்மார்ட்போனை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் சுமார் ரூ.59,500 - ரூ.60,400 என்கிற விலைக்கு இடையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் மாடலான 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் சுமார் ரூ.67,800 - ரூ.68,700 என்ற விலையில் அறிமுகம் செய்யட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த தகவல்கள் அனைத்தும் லீக்ஸ் தகவல்கள்

இந்த தகவல்கள் அனைத்தும் லீக்ஸ் தகவல்கள்

இந்த தகவல்கள் அனைத்தும் லீக்ஸ் தகவல்கள் என்பதை நன்கு கவனத்தில் கொள்ளுங்கள், ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் விலை விவரங்களை ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL மலிவு விலையில் வழங்கும் 100 ஜிபி பிராட்பேண்ட் திட்டத்தின் காலம் நீட்டிப்பு!BSNL மலிவு விலையில் வழங்கும் 100 ஜிபி பிராட்பேண்ட் திட்டத்தின் காலம் நீட்டிப்பு!

பெரும்பாலும் உண்மையே

பெரும்பாலும் உண்மையே

தொழில்நுட்பத்தின் லீக் தகவல்கள் அனைத்தும் பெரும்பாலும் உண்மையாகவே அமையும் எனதும் குறிப்பிடத்தக்கது. ஆகையால் அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கும் வரை நாம் அனைவரும் சற்று பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
OnePlus 8 Pro And OnePlus 8 Price Leaked On Internet Before Of April 14 Launch : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X