Home
Mobile

இன்று களமிறங்கும் OnePlus 8 Pro, OnePlus 8 ஸ்மார்ட்போன்கள்.! லைவ் ஸ்ட்ரீம் பார்ப்பது எப்படி?

இன்று மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 8ப்ரோ, ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று இரவு 8.30மணி அளவில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

YouTube சேனல்

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை YouTube சேனல் மூலம் எளிமையாக பார்க்க முடியும். குறிப்பாகஇந்த ஸ்மார்ட்போன்கள் சற்று உயர்வான விலையில் வெளிவரும். மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப்பார்ப்போம்.

 நிறுவனத்தின்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களானது, முந்தைய ஒன்பிளஸ் 7 , ஒன்பிளஸ் 7 ப்ரோ, ஒன்பிளஸ் 7T மற்றும் ஒன்பிளஸ் 7T ப்ரோ ஆகின சாதனங்களை விட அதிக அம்சங்களுடன் வேறெவரும் எண்பத்து நாம் அறிந்ததே, இதனால் இந்த சாதனத்தின் விலை நிர்ணயங்கள் அதிகமாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒன்பிளஸ் நிறுவனம்

ஒன்பிளஸ் நிறுவனம் முதல் முறையாக ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5ஜி தொழில்நுட்ப ஆதரவை வழங்கவுள்ளது. இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை இயக்குவதற்கான கூடுதல் வன்பொருள் மாற்றங்களை ஒன்பிளஸ் மேற்கொண்டுள்ளது என்பதால், ஒன்பிளஸ் நிர்ணயம் செய்துள்ள விலைக்குப் பின்னால் நியாயமான காரணங்கள் இருக்கிறது என்பதே
உண்மை.

 ஸ்மார்ட்போன்களை

ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை இதில் கிடைக்கப்பெறும் கூடுதல் அம்சங்கள் என்னவாக இருக்குமென்றால், சமீபத்திய குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், 5ஜி ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ஃப்லூயிட் டிஸ்பிளே, எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 3.0 ஃபிளாஷ் மெமரி, வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 4,510 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று
தகவல்கள் கசிந்துள்ளது.

ஒன்பிளஸ் 8 ப்ரோ

ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் மாடல் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.76,000 - 76,900 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வேரியண்ட் மாடல் சுமார் ரூ.83,500 - ரூ.84,400 என்ற விலைக்கு இடையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார் ரூ.67,800 - ரூ.68,700

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் சுமார் ரூ.59,500 - ரூ.60,400 என்கிற விலைக்கு இடையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் மாடலான
12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் சுமார் ரூ.67,800 - ரூ.68,700 என்ற விலையில் அறிமுகம் செய்யட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

லீக்ஸ் தகவல்கள்

இந்த தகவல்கள் அனைத்தும் லீக்ஸ் தகவல்கள் என்பதை நன்கு கவனத்தில் கொள்ளுங்கள், ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் விலை விவரங்களை ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 லீக் தகவல்கள் அனைத்து

தொழில்நுட்பத்தின் லீக் தகவல்கள் அனைத்தும் பெரும்பாலும் உண்மையாகவே அமையும் எனதும் குறிப்பிடத்தக்கது. ஆகையால் அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கும் வரை நாம் அனைவரும் சற்று பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
OnePlus 8, OnePlus 8 Pro set to Launch Today at 8.30PM: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X