Home
Mobile

ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த 'ஒன்பிளஸ் 8' புகைப்படம்!

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் தனது பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியது - இந்தியாவில் ஒன்பிளஸ் 7T மற்றும் ஒன்பிளஸ் 7T புரோ வேரியண்ட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வெறும் சில வாரங்களே ஆகியுள்ள நிலையில்.

ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த 'ஒன்பிளஸ் 8' புகைப்படம்!

தற்பொழுது ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் மாடலான ஒன்பிளஸ் 8 மாடலுக்கான வேளையில் மும்முரமாக ஒன்பிளஸ் நிறுவனம் இறங்கியுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் புகைப்படம் ஒன்று லீக் ஆகியுள்ளது. ஒன்பிளஸ் 7T ப்ரோ மாடல் போலவே இந்த புதிய ஒன்பிளஸ் 8 மாடல் ஸ்மார்ட்போனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் மாடல் பன்ச் ஹோல் செல்ஃபி கேமராவுடன் அறிமுகம் செய்யப்படும் என்று அதன் புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது. தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 7T மாடல் போலவே இதிலும் 90 Hz கொண்ட ஹை-ரெசொலூஷன் ஃப்ளுயிட் அமோலேட் கர்வுடு டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய ஒன்பிளஸ் 7 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 7T ப்ரோ ஸ்மார்ட்போன்களில் ஒன்பிளஸ் நிறுவனம், பாப்-அப் செல்ஃபி கேமராவை வழங்கி இருந்தது. ஆனால் தற்பொழுது வெளியாகியுள்ள ஒன்பிளஸ் 8 போனில் பன்ச் ஹோல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் முந்தைய மாடல்களின் ட்ரிபிள் கேமரா செட்டப், ஒன்பிளஸ் 8 சாதனத்திலும் தொடரப்படுகிறது என்பது உறுதியாகியுள்ளது. குவாட் கேமரா செட்டப்பிற்கு ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் தயாராகவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் கேமரா விபரம், பிராசஸர் விபரம், ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விபரங்கள் எதுவும் இன்னம் வெளியிடப்படவில்லை. ஒன்பிளஸ் 8 பற்றிய அடுத்த லீக்-கிற்கு நாம் காத்திருக்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 8 Images Got Leaked : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X