OnePlus 7T ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஜியோ நிறுவனத்தின் VoWiFi ஆதரவு கிடைத்த வண்ணம் உள்ளது, கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த புதிய அப்டேட் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் ஆக்ஸிஜன்ஓஎஸ் 10.0.8 உடன் வருகிறது. இந்த புதுப்பிப்பு ஒன்பிளஸ் 7T-க்கு சமீபத்திய ஜனவரி 2020 பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகிறது. குறிப்பாக இந்த வசதி ஒன்பிளஸ் 7டி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஒன்பிளஸ் 7டி டிஸ்பிளே
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடல் 6.55-இன்ச்- Fluid AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400×1080 பிக்சல் திர்மானம், எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் எச்டிஆர் 10பிளஸ் டிஸ்பிளே ஆதரவு கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட் வசதி
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஒன்பிளஸ் 7டி கேமராக்கள்
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ்+ 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, தரமான எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் 3800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
இந்த ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் 3800எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதால்சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் வீடியோ, வீடீயோ கேம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாகபயன்படும் இந்த ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications