ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.!
லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 7டி ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரன் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது பாப்-அப் செல்பீ கேமரா, வளைந்த விளிம்புகள் மற்றும் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது.

மேலும் சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் போன்றே இந்த ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் வார்ப் சார்ஜ் 30 டி ஆதரவு கொண்டுள்ளது, ஆனால் சற்று பெரிய அளவிலான 4085எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு
இந்த ஒன்பிளஸ் 7டி ப்ரோ வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் ஆனது 90Hz விகிதத்திலான Refresh Rate கொண்ட QHD+ டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் உடன் ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரன் எடிஷன் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது, குறிப்பாக இந்த சாதனம் எஃப் 1 ரேசிங் கார் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் சாதனத்தில்பப்பாளி ஆரஞ்சு வண்ண நிறத்திலான பூச்சு உள்ளது. மேலும் 12ஜிபி ரேம் மற்றும் சிறந்த மென்பொருள் அமைப்புடன் இந்த சாதனதம் வெளிவந்துள்ளது. இப்போது ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரன் எடிஷன் சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரன் எடிஷன் அம்சங்கள்:
டிஸ்பிளே: 6.67-இன்ச் Fluid அமோலேட் டிஸ்ப்ளே (1440x3120 பிக்சல்கள்)
கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு
சிப்செட்: 2.96ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் எஸ்ஒசி
உடன் அட்ரினோ 640 ஜி.பீ.யூ
ரேம்: 12ஜிபி
மெமரி 256ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 16எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்
செல்பீ கேமரா: 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ சென்சாரை கொண்டுள்ளது
பேட்டரி: 4085

அட்டகாசமான விலை
ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.53,999-ஆக உள்ளது. பின்பு ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரன் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.58,999-ஆக உள்ளது. மேலும் ஆக்டோபர் 11-ம் (இன்று) விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








