ரெட் & வயலட் நிறத்தில் களமிறங்கும் ஒன்பிளஸ் 7T ப்ரோ! உண்மை என்ன தெரியுமா?

|

ஒன்பிளஸ் 7T ப்ரோ ஸ்மார்ட்போன் நான்கு புதிய வண்ண வகைகளில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒன்பிளஸ் 7T ப்ரோ ஸ்மார்ட்போன் ரெட் மற்றும் வயலட் என்ற புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்பதற்கான துப்பு ஒன்று தற்பொழுது கிடைத்துள்ளது.

ஆண்ட்ராய்டு 10 Oxygen OS ஓபன் பீட்டா அப்டேட்

ஆண்ட்ராய்டு 10 Oxygen OS ஓபன் பீட்டா அப்டேட்

சமீபத்தில் வெளியான ஆண்ட்ராய்டு 10 இணக்கம் கொண்ட, புதிய Oxygen OS ஓபன் பீட்டா அப்டேட் வெர்ஷனில் தான் ஒன்பிளஸ் 7T ப்ரோ ஸ்மார்ட்போன் நாக்கு புதிய வண்ண நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என்பதற்கான துப்பு கிடைத்துள்ளது. அந்த துப்பு என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

பிஸியான மாதமாக மாறிய செப்டம்பர்

பிஸியான மாதமாக மாறிய செப்டம்பர்

ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் கொஞ்சம் பிஸியான மாதமாகத் தான் இருக்கப் போகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஏன்னென்றால் ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்யவிருக்கிறது. அத்துடன் ஒன்பிளஸ் 7 சீரிஸ் போன்களுக்கு புதிய அப்டேட்டையும் அறிமுகம் செய்யவுள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.

அனைவருக்கும் இலவச செட்-டாப்-பாக்ஸ் வழங்க ஜியோ முடிவு! என்ன காரணம் தெரியுமா?அனைவருக்கும் இலவச செட்-டாப்-பாக்ஸ் வழங்க ஜியோ முடிவு! என்ன காரணம் தெரியுமா?

புதிய ஒன்பிளஸ் 7T சீரிஸ்

அதேபோல் இந்த மாத இறுதிக்குள் ஒன்பிளஸ் 7T ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் மாடல்களும் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் 7T சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் கூடுதலாக சில புதிய சேவைகளும் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சில ஒப்பனை மாற்றங்களுடன் பாதுகாப்பு சேவை

சில ஒப்பனை மாற்றங்களுடன் பாதுகாப்பு சேவை

ஒன்பிளஸ் நிறுவனம் இன்று காலை, ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ போனிற்கான ஆண்ட்ராய்டு 10 ஓபன் பீட்டா உருவாக்கத்தை வெளியிட்டது. இந்த புதிய அண்ட்ராய்டு 10 புதுப்பிப்பு ஆக்ஸிஜன் ஓஎஸ் இல் சில ஒப்பனை மாற்றங்களுடன், தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேம்பாட்டுச் சேவைகளை ஓன்பிளஸ் வழங்கியுள்ளது.

காதலியுடன் ஜாலிமூடில் அமேசான் நிறுவனர்: வைரல் புகைப்படங்கள்-சுத்துங்க எஜமா சுத்துவங்க.!காதலியுடன் ஜாலிமூடில் அமேசான் நிறுவனர்: வைரல் புகைப்படங்கள்-சுத்துங்க எஜமா சுத்துவங்க.!

நோட்டிபிகேஷன் ஹரிசான் லைட்

நோட்டிபிகேஷன் ஹரிசான் லைட்

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டு 10 ஓபன் பீட்டா உருவாக்கத்தில், ஹரிசான்(horizon) லைட் சேவையில் மூன்று புதிய வண்ணங்களை ஒன்பிளஸ் நிறுவனம் சேர்த்துள்ளது. ஹரிசான் லைட் என்பது நோட்டிபிகேஷன் வரும் சமயத்தில் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பக்கவாட்டில் ஒளிரும் நோட்டிபிகேஷன் லைட் ஆகும்.

புதிய கோல்டன், ரெட் மற்றும் வயலட் நிறங்கள்

புதிய கோல்டன், ரெட் மற்றும் வயலட் நிறங்கள்

இந்த நோட்டிபிகேஷன் ஹரிசான் லைட் முதலில் நீல நிறத்தில் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது, அதுவும் ஒன்பிளஸ் 7 ப்ரோவின் நெபுலா ப்ளூ வேரியண்ட் மாடலை பிரதிபலிக்கும் விதத்தில் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள அப்டேட்டில் கோல்டன், ரெட் மற்றும் வயலட் நிறங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.! உங்க போனும் இருக்கா பாருங்க.!ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.! உங்க போனும் இருக்கா பாருங்க.!

எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ஒன்பிளஸ் 7T

எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ஒன்பிளஸ் 7T

கோல்டன் நிறம் ஒன்பிளஸ் 7 ப்ரோவின் அல்மோன்ட் வேரியண்ட்டை குறிக்கிறது. கூடுதலாக வழங்கப்பட்டுள்ள இந்த புதிய ரெட் மற்றும் வயலட் நிறம் அடுத்து அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒன்பிளஸ் 7T ப்ரோவின் புதிய வண்ண நிறமாக இருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரீமியம் குவாலிட்டி டிசைனில் ஒன்பிளஸ் 7T ப்ரோ

பிரீமியம் குவாலிட்டி டிசைனில் ஒன்பிளஸ் 7T ப்ரோ

ஆகவே புதிய ஒன்பிளஸ் 7T ப்ரோ, அல்மோன்ட், நெபுலா ப்ளூ, ரெட் மற்றும் வயலட் என்ற நான்கு புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 7T ப்ரோ ஸ்மார்ட்போன் பிரீமியம் குவாலிட்டி ஸ்மார்ட்போன் என்பதனால் நிச்சயம் இந்த நிறங்கள் கிரேடியன்ட் கோட்டிங் உடன் களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 7T Pro may come in four new colour variants Do you know what's the truth : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X