ஒன்பிளஸ் 7 சீரீஸ் அக்டோபரில் வெளியாகின்றதா?

|

ஒன்பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளிவந்துள்ளது. மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் 15ல் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

சீன நிறுவனத்தை சேர்ந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புதிய சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

ஒன்பிளஸ் 7T சீரீஸ்

ஒன்பிளஸ் 7T சீரீஸ்

சமீபத்தில் கூட அதாவது கடந்த மே மாதம் ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் வெளியிடது. இந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 புரோ ஆகிய மாடல்கள் கிடைத்தன. இந்த நிலையில் ஏற்கனவே வெளிவந்துள்ள ஒன்பிளஸ் 3T, 5T, மற்றும் 6T மத்தியில் தற்போது மீண்டும் ஒரு T சீரிஸ் போன் வெளியாகவுள்ளது. இன்னும் ஒருசில மாதங்களில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 7T சீரீஸ் புதிய மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது

8 புதிய ஏலியன் சிக்னல்கள் கண்டுபிடிப்பு! ஏலியன்கள் என்ன சொல்ல நினைக்கிறது?

அக்டோபர் 15

அக்டோபர் 15

தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவலின்படி ஒன்பிளஸ் 7T சீரீஸ் புதிய மாடல் ஸ்மார்ட்போன் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி வெளிவரும் என தெரிகிறது. அதாவது ஒன்பிளஸ் 7 சீரீஸ் வெளிவந்து ஐந்தாவது மாதத்திலேயே இந்த புதிய மாடல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது டுவிட்டரில் லீக் ஆகி கொண்டிருந்தபோதிலும் பெரும்பாலும் இது உண்மையாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து ஒரு மறைமுகமான செய்தி டுவிட்டரில் வெளிவந்துள்ளதால் நிச்சயம் அக்டோபர் 15ல் இந்த மாடலை எதிர்பார்க்கலாம்

8 புதிய ஏலியன் சிக்னல்கள் கண்டுபிடிப்பு! ஏலியன்கள் என்ன சொல்ல நினைக்கிறது?

ஸ்னாப்டிராகன் 855+

ஸ்னாப்டிராகன் 855+

ஒன்பிளஸ் 7T சீரீஸ் புதிய மாடல் ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலை இதுவரை நிறுவனம் அதிகாரபூர்வமாக எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை. ஆனால் அதே நேரத்தில் ஒன்பிளஸ் 7 சீரீஸ் வகையை போன்ற ஹார்ட்வேர் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. அதிகபட்சமாக இந்த புதிய மாடலில் SoC அப்கிரேட் செய்திருக்க வாய்ப்பு உண்டு. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ தன்மையும் அதனுடன் சில லேட்டஸ்ட் டெக்னாலஜியும் இணைக்கப்பட்டிருக்கும். இருப்பினும் இந்த புதிய ஒன்பிளஸ் 7T சீரீஸ் புதிய மாடல் குறித்த அறிவிப்பை நிறுவனம் விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 7

ஒன்பிளஸ் 7

ஒன்பிளஸ் 7 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 SoC சிப்செட் , ஆண்ட்ராய்டு 9 பை, ஆப்டிக் அமோல்ட் 6.41 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 6 ஜிபி மற்றும் 128 ஜிபி இண்டர்னல் மெமரி, 48எம்பி மற்றும்ன் 5 எம்பி பின் கேமிரா, 16 எம்பி செல்பி கேமிரா மற்றும் 3,700mAh பேட்டரி தன்மை ஆகியவை உள்ளது.

 ஒன்பிளஸ் 7 புரோ

ஒன்பிளஸ் 7 புரோ

அதேபோல் ஒன்பிளஸ் 7 புரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் , ஆண்ட்ராய்டு 9 பை, லிக்யூட் அமோல்ட் 6.7 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 6 ஜிபி மற்றும் 128 ஜிபி இண்டர்னல் மெமரி, மூன்று பின் கேமிரா, 16 எம்பி செல்பி கேமிரா மற்றும் 4000mAh பேட்டரி தன்மை ஆகியவை உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus 7T Pro launch date specs rumours and features : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X