களமிறங்கும் ஒன்பிளஸ் 7T ப்ரோ கடுப்பாகும் ஒன்பிளஸ் ரசிகர்கள்! காரணம் இதுதான்!

|

கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் தான் ஒன்பிளஸ் நிறுவனம், தனது ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி சில மாதமே ஆகியுள்ள நிலையில் அதற்குள் ஒன்பிளஸ் 7T ப்ரோ பற்றிய தகவல்கள் வலைத்தளங்களில் கசியத் துவங்கியுள்ளது.

ஒன்பிளஸ் 'T' அப்டேட்

ஒன்பிளஸ் 'T' அப்டேட்

ஆறு மாத அப்டேட் மாற்றங்களைப் பின்பற்றும் சில முன்னணி நிறுவனங்களின் ஒன்பிளஸ் நிறுவனமும் ஒன்றாகும். எப்பொழுதும் அதன் முந்தைய மாடல் போன்களுடன் 'T' என்ற எழுத்தைச் சேர்த்து ஒன்பிளஸ் 3T, ஒன்பிளஸ் 5T, ஒன்பிளஸ் 6T என்று அடுத்த மேம்பட்ட வேரியண்ட் மாடலை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

 ஒன்பிளஸ் 7T ப்ரோ

ஒன்பிளஸ் 7T ப்ரோ

இந்த வரிசையில் ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்தபடியாக, ஒன்பிளஸ் 7T ப்ரோ மாடலை அறிமுகம் செய்யவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஒன்பிளஸ் 7T ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன் முன்பு வெளியிடப்பட்ட ஒன்பிளஸ் 7 ப்ரோவின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய அம்சங்களுடன் வெளியிடப்படும்.

வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் செட்டிங்ஸ் மாற்றம் செய்வது எப்படி? வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் செட்டிங்ஸ் மாற்றம் செய்வது எப்படி?

 பாப் அப் செல்ஃபி கேமரா-இன்பினிட்டி ஆல் ஸ்கிரீன்

பாப் அப் செல்ஃபி கேமரா-இன்பினிட்டி ஆல் ஸ்கிரீன்

ஒன்பிளஸ் 7T ப்ரோ ஸ்மார்ட்போனின் புகைப்படம் தற்பொழுது வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. படத்தில் பார்த்ததை வைத்துப் பார்க்கும்பொழுது ஒன்பிளஸ் 7T ப்ரோ இன்பினிட்டி ஆல் ஸ்கிரீன் டிஸ்பிளேயுடன், பாப் அப் செல்ஃபி கேமராவுடன் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் இதே அம்சங்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டின் பாதுகாப்பு கேமராவில் உள்ள முக்கிய குறை.! வீட்டின் பாதுகாப்பு கேமராவில் உள்ள முக்கிய குறை.!

சாஃப்ட்வேர் மற்றும் ஹார்ட்வர் மாற்றங்கள்

சாஃப்ட்வேர் மற்றும் ஹார்ட்வர் மாற்றங்கள்

ஒன்பிளஸ் 7T ப்ரோ பார்ப்பதற்கு அப்படியே ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் போலவே உள்ளது. ஆனால் இதன் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்ட்வர் பிரிவுகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் கசிந்துள்ளது. முக்கியமாக ஒன்பிளஸ் 7T ப்ரோ ஸ்மார்ட்போனில் புதிய கேமரா சென்சார்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிக்டாக் மூலம் எளிமையாக பணம் சம்பாதிப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.! டிக்டாக் மூலம் எளிமையாக பணம் சம்பாதிப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிரசஸர்

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிரசஸர்

புதிய ஒன்பிளஸ் 7T ப்ரோ, ஆண்ட்ராய்டு Q இயங்குதளத்துடன், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிரசஸருடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஒன்பிளஸ் 7T ப்ரோவில் பெரிய அளவு பேட்டரி கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

70 பெண்களை மிரட்டி செக்ஸ்.! செல்போன் வீடியோவால் சிக்கிய கொடூரன்.!70 பெண்களை மிரட்டி செக்ஸ்.! செல்போன் வீடியோவால் சிக்கிய கொடூரன்.!

புதிய நிறத்தில் ஒன்பிளஸ் 7T ப்ரோ

புதிய நிறத்தில் ஒன்பிளஸ் 7T ப்ரோ

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்து இரண்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில், கூடுதல் சேவைகளுடன், புதிய நிறத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 7T ப்ரோ ஸ்மார்ட்போனை நவம்பர் மாதம் வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகில் மிக சக்திவாய்ந்த நாடுகளால் கூட முடியாது, ஆனால் இந்தியாவால் முடியும்.! உலகில் மிக சக்திவாய்ந்த நாடுகளால் கூட முடியாது, ஆனால் இந்தியாவால் முடியும்.!

உச்சக்கட்ட கடுப்பில் ரசிகர்கள்

உச்சக்கட்ட கடுப்பில் ரசிகர்கள்

இதனால் ஒன்பிளஸ் ரசிகர்கள் சற்று கடுப்பில் உள்ளனர், முக்கியமாக ஒன்பிளஸ் 7 ப்ரோ வாங்கிய ரசிகர்கள் இந்த தகவலைக் கேட்டு உச்சக்கட்ட கடுப்பில் உள்ளனர்.

Best Mobiles in India

English summary
OnePlus 7T Pro leak made OnePlus Fans angry do you know why The reason is this : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X