Home
Mobile

ஒன்பிளஸ் 7டி மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5-வது ஆண்டு விழாவை அமேசானுடன் இந்தியாவில் கொண்டாடுகிறது. அதன்படி இந்த இந்நிறுவனம் ஒன்பிளஸ் 7ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த சலுகைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

டிசம்பர் 2-ம் தேதி வரை

டிசம்பர் 2-ம் தேதி வரை

மேலும் இந்த சிறப்பு விற்பனை இன்று தொடங்கி வரும் டிசம்பர் 2-ம் தேதி வரை அமேசான் தளத்தில் நடைபெறும் எனத் தெரிவிகக்கப்பட்டுள்ளது. அதன்படி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.37,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.34,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 7டி மாடலின் முந்தைய விலை ரூ.39,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.37,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் 7ப்ரோ

ஒன்பிளஸ் 7ப்ரோ

6ஜிபி ரேம் கொண்ட் ஒன்பிளஸ் 7ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.48,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.39,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 8ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 7ப்ரோ மாடலின் முந்தைய விலை ரூ.52,999-ஆகஇருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.42,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் 7 ப்ரோ அம்சங்கள்

ஒன்பிளஸ் 7 ப்ரோ அம்சங்கள்

டிஸ்பிளே: 6.67-இன்ச் க்யூஎச்டி பிளஸ் குடரனை யுஆழுடுநுனு டிஸ்பிளே (3120*1440பிக்சல் திர்மானம்;)
எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
சிப்செட்: 7என்எம் ஆக்டோ-கோர் 2.84ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட்
ரேம்: 6ஜிபி/8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி சென்சார் (பாப்-அப் கேமரா)
பேட்டரி: 4000எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
நிறங்கள்: Almond,நெபுலா ப்ளூ, மிரர் கிரே
வைஃபை 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி

 ஒன்பிளஸ் 7டி டிஸ்பிளே

ஒன்பிளஸ் 7டி டிஸ்பிளே

ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடல் 6.55-இன்ச்- Fluid AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2400×1080 பிக்சல் திர்மானம், எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் எச்டிஆர் 10பிளஸ் டிஸ்பிளே ஆதரவுகொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் 7டி சிப்செட் வசதி

ஒன்பிளஸ் 7டி சிப்செட் வசதி

ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது.
மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஒன்பிளஸ் 7டி  கேமரா

ஒன்பிளஸ் 7டி கேமரா

ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ்+ 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, தரமான எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் 3800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 7T, OnePlus 7 Pro available with up to Rs 10,000 discount for a limited period : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X