ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்க ஐடியா இருக்கா: இந்த மாடலுக்கு அதிரடி விலைக்குறைப்பு!
பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனுக்கு நிறுவனம் அதிரடி விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் தற்போதய விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 7T-க்கு விலைக்குறைப்பு
ஒன்பிளஸ் 8 டி அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக ஒன்பிளஸ் 7T-க்கு நிறுவனம் விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரிலிருந்து ரூ .3,000 தள்ளுபடி பெறலாம். இது 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் கொண்டது. இந்த ஸ்மார்ட்போனை தற்போது ரூ.34,999-க்கு கிடைக்கும். அமேசான் இன்னும் ஒன்பிளஸ் 7 டி மாடலை ரூ.37,99-க்கே விற்பனை செய்கிறது.

ஒன்பிளஸ் 7டி டிஸ்பிளே
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடல் 6.55-இன்ச்- Fluid AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400×1080 பிக்சல் திர்மானம், எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் எச்டிஆர் 10பிளஸ் டிஸ்பிளே ஆதரவு கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட் வசதி
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஒன்பிளஸ் 7டி கேமரா
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ்+ 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, தரமான எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் 3800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
source: bgr.in


Click it and Unblock the Notifications