ரூ. 74 விலையில் புதிய ஒன்பிளஸ் 7T வாங்கலாம்.. ஆனால், ஒரு சின்ன டிவிஸ்ட் இருக்கு..

|

ஆம், நீங்கள் இந்த பதிவின் தலைப்பை சரியாக தான் படித்தீர்கள், 2019 ஆம் ஆண்டின் Q4 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் மாடலை இப்போது வெறும் ரூ. 74 விலையில் வாங்க முடியும். இது எப்படி சாத்தியம் என்பது தானே உங்களுடைய கேள்வி, வாருங்கள் சொல்கிறோம்.

வெறும் 74 ரூபாயில் புதிய ஒன்பிளஸ் 7T

வெறும் 74 ரூபாயில் புதிய ஒன்பிளஸ் 7T

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 39,999 என்ற விலையிலும், அமெரிக்காவில் 599 டாலர் என்ற விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இப்பொழுது இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.74 மட்டும் கூடுதலாக செலுத்தி நீங்கள் உங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள ஒரு அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த விலையில் புதிய ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் மாடலை வாங்குவதற்கு ஒரு சில முக்கிய நிபந்தனைகள் உள்ளது.

ஒன்பிளஸ் 8T வாங்கினால் OnePlus 7T கிடைக்கும்

ஒன்பிளஸ் 8T வாங்கினால் OnePlus 7T கிடைக்கும்

OnePlus 7T ஸ்மார்ட்போனை 74 ரூபாயில் வாங்குவதற்கு, ஒருவர் 799 அமெரிக்கா டாலர் (ரூ. 59,086) செலுத்தி ஒன்பிளஸ் 8T வாங்க வேண்டும். பிளாக் ஃப்ரைடே விற்பனையின் ஒரு பகுதியாக இந்த சலுகை அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்க. உங்களுக்கு வேண்டியவர்கள் யாரும் அமெரிக்காவில் இருந்தால் இதை பற்றி தெரியப்படுத்துங்கள்.

Whatsapp பயனர்களே உஷார்.. ஹேக்கர்களின் புதிய வழி மோசடியில் சிக்கிக்கொள்ளாதீர்கள்..Whatsapp பயனர்களே உஷார்.. ஹேக்கர்களின் புதிய வழி மோசடியில் சிக்கிக்கொள்ளாதீர்கள்..

மொத்தமாக 800 டாலருக்கு இரண்டு போன்

மொத்தமாக 800 டாலருக்கு இரண்டு போன்

இப்படி ஒன்பிளஸ் 8T வாங்கும் நபர், கூடுதலாக ஒரே ஒரு அமெரிக்க டாலர் மட்டும் சேர்த்து செலுத்தி மொத்தமாக 800 டாலருக்கு இரண்டு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கிக்கொள்ளலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வெறும் $ 800 (ரூ. 59,160) விலையில் ஒருவர் பெற முடியும் என்ற உண்மையை கருத்தில் கொண்டு இது ஒரு அற்புதமான ஒப்பந்தம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSNL ரூ .247 திட்டம்.. தினமும் 3ஜிபி.. வேலிடிட்டி முன்பை விட 10 நாட்கள் அதிகம்..BSNL ரூ .247 திட்டம்.. தினமும் 3ஜிபி.. வேலிடிட்டி முன்பை விட 10 நாட்கள் அதிகம்..

Android 12 அப்டேட்

Android 12 அப்டேட்

ஒன்பிளஸ் 7 டி, முதன்மை குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ SoC, 90Hz புதுப்பிப்பு-விகித டிஸ்பிளே மற்றும் ஒரு டெலிஃபோட்டோ லென்ஸுடன் மூன்று கேமரா அமைப்புடன் வருகிறது. இரண்டு போன்களும் சிறந்த விவரக்குறிப்பு அம்சங்களை வழங்குகின்றது. ஒன்ப்ளஸ் 7T கூடுதல் அம்சங்களுடன் Android 11 மற்றும் Android 12 அப்டேட்களைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக சிறந்த ப்ளாக் ஃப்ரைடே சலுகை தான்.

Best Mobiles in India

English summary
OnePlus 7T Available For Just Rs. 74 But What's The Catch : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X