ஒன்பிளஸ் 7T மற்றும் ஒன்பிளஸ் 7T ப்ரோ விலை மற்றும் அறிமுக தேதி லீக்கானது!

|

ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த மே மாதம் ஒன்பிளஸ் 7 மற்றும் ஒனேபிள்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த புதிய ஒன்பிளஸ் மாடலான ஒன்பிளஸ் 7T மற்றும் ஒன்பிளஸ் ஒன்பிளஸ் 7T ப்ரோ ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

விலை, அறிமுக தேதி லீக்

விலை, அறிமுக தேதி லீக்

கடந்த சில வாரமாக ஒன்பிளஸ் 7T மற்றும் ஒன்பிளஸ் 7T ப்ரோ பற்றிய செய்திகளும், லீக்ஸ்களும் வலைத்தளத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. தற்பொழுது ஒன்பிளஸ் 7T சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றிய விலை, அறிமுக தேதி மற்றும் முழு விபரம் என அனைத்து தகவல்களும் லீக் ஆகியுள்ளது.

டிஸ்பளே

டிஸ்பளே

ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட 6.41 இன்ச் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யபட்டது. அதேபோல் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆல் ஸ்கிரீன் டிஸ்பிளேயுடன் கூடிய 6.67' இன்ச் கொண்ட AMOLED டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஒன்பிளஸ் 7T சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் இதே டிசைன் மற்றும் இதே அளவிலேயே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உடன் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜியோவை தொடர்ந்து இலவச எச்டி டிவி, செட்-டாப் பாக்ஸ் வழங்கும் ஏர்டெல்: அதிரடி ஆரம்பம்.!ஜியோவை தொடர்ந்து இலவச எச்டி டிவி, செட்-டாப் பாக்ஸ் வழங்கும் ஏர்டெல்: அதிரடி ஆரம்பம்.!

புதிய குவாள்காம் பிராசஸர்

புதிய குவாள்காம் பிராசஸர்

புதிய ஒன்பிளஸ் 7T மற்றும் ஒன்பிளஸ் 7T ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 855+ பிராசஸர் சிப்செட்டுடன் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிராசஸர் முன்பு வழங்கப்பட 2.84GHz வேகத்தை விட அதிகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஸ்னாப்டிராகன் 855+ பிராசஸர் 2.96GHz வேகத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டோரேஜ் வேரியண்ட்

ஸ்டோரேஜ் வேரியண்ட்

புதிய ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் 6ஜிபி / 128ஜிபி மற்றும் 8ஜிபி / 256ஜிபி வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிய ஒன்பிளஸ் 7T ப்ரோ ஸ்மார்ட்போன் 6ஜிபி / 128ஜிபி, 8ஜிபி / 256ஜிபி மற்றும் 12ஜிபி / 256ஜிபி வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.96 தினமும் 10ஜிபியை 4ஜியில் வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.!ரூ.96 தினமும் 10ஜிபியை 4ஜியில் வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.!

புதிய கேமரா வடிவம்

புதிய கேமரா வடிவம்

கடந்த வாரம் புதிய ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் சர்குலர் மாடூள்(Circular Module) செட்டப் கொண்ட ட்ரிபிள் கேமரா செட்டப் உடன் வெளிவரும் என்பதற்கான தகவல்களும் வலைத்தளத்தில் வெளியாகியது. அதேபோல் ஒன்பிளஸ் 7T ப்ரோ ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் கொண்ட நான்கு கேமராக்களுடன் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரி தகவல்

பேட்டரி தகவல்

புதிய ஒன்பிளஸ் 7T சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இரண்டுமே முன்பு வழங்கப்பட பேட்டரியை விடப் பெரிய அளவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆண்ட்ராய்டு 10 இணக்கத்துடன் கூடிய OxygenOS இயங்குதளம் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா?கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா?

விலை மற்றும் அறிமுகம் தேதி

விலை மற்றும் அறிமுகம் தேதி

புதிய ஒன்பிளஸ் 7T மற்றும் ஒன்பிளஸ் 7T ப்ரோ ஸ்மார்ட்போன்கல் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி இந்தியாவில் நடக்கவுள்ள ஒன்பிளஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை, முன்பு ரூ.32,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 7 மற்றும் ரூ.48,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலையை விட அதிகமாகத் தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்று தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
OnePlus 7T and 7T Pro specifications, price, launch date Leaks Know It Before Planning : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X