Home
Mobile

ரசிகர்களுக்கு முன் அறிவிப்பு இல்லாமல் ஒன்பிளஸ் கொடுத்த அதிர்ச்சி! புதிய மிரர் ப்ளூ வேரியண்ட்!

ஒன்பிளஸ் நிறுவனம், புதிய மிரர் ப்ளூ வேரியண்ட் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மடலை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு முன் விளம்பரமும் இல்லாமல் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கலர் வேரியண்ட் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மட்டுமே பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மிரர் ப்ளூ வேரியண்ட்

புதிய மிரர் ப்ளூ வேரியண்ட்

இந்த மாதம் நடைபெற இருக்கும் அமேசான் பிரைம் டே விற்பனையில் தான் ஒன்பிளஸ் நிறுவனம், இந்த புதிய மிரர் ப்ளூ வேரியண்ட் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அட்டகாசமான ப்ளூ கண்ணாடி கோட்டிங் கொண்ட வடிவமைப்பில் கண்களைக் கவரும் படி இந்த புதிய வேரியண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜூலை 15 முதல் விற்பனை

ஜூலை 15 முதல் விற்பனை

அமேசான் பிரைம் டே விற்பனையான ஜூலை 15 மற்றும் ஜூலை 16 ஆம் தேதி முதல் இந்த மிரர் ப்ளூ ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கிடைக்குமென்ற அதிகாரப்பூர்வ விளம்பரத்தையும் ஒன்பிளஸ் அமேசான் தளத்தில் பதிவிட்டுள்ளது. ஒன்பிளஸ் 7 ப்ரோவின் நெபுலா ப்ளூ வேரியண்ட் போலவே அச்சு அசலாய் மிரர் தோற்றத்தில் தோற்றமளிக்கிறது இந்த புதிய வேரியண்ட்.

ஒன்பிளஸ் 7 ப்ரோவிற்கு பின் ஒன்பிளஸ் 7 ப்ளூ

ஒன்பிளஸ் 7 ப்ரோவிற்கு பின் ஒன்பிளஸ் 7 ப்ளூ

ஒன்பிளஸ் குடும்பத்தில் முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட நெபுலா ப்ளூ வேரியண்ட் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் தான். அதனைத் தொடர்ந்து தற்பொழுது ஒன்பிளஸ் குடும்பத்தில் அறிமுகம் செய்யப்படும் ப்ளூ வேரியண்ட், இந்த ப்ளூ மிரர் வேரியண்ட் ஒன்பிளஸ் 7 மாடல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் மற்றும் ஒன்பிளஸ் தளத்தில் விற்பனை

அமேசான் மற்றும் ஒன்பிளஸ் தளத்தில் விற்பனை

ஒன்பிளஸ் நிறுவனம், இந்த புதிய மிரர் ப்ளூ வேரியண்ட் பற்றிய எந்த ஒரு முன் விளம்பரமும் இல்லாமல், நேரடியாக விற்பனை தேதியுடன் அறிமுகம் செய்துள்ளது ஒன்பிளஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமேசான் மற்றும் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ தளத்தில் ஜூலை 15 முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மிரர் ப்ளூ ஒன்பிளஸ் 7 விலை

புதிய மிரர் ப்ளூ ஒன்பிளஸ் 7 விலை

ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்ட அதே சிறப்பம்சங்கள் தான் இதிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட் நிறம் மட்டுமே மாற்றப்பட்டு 6ஜிபி ரேம் உடன் கூடிய 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்புடன் வெறும் ரூ.32,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus 7 will launch in Mirror Blue on Amazon Prime Day Sale July 15th : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X