ஒன்பிளஸ் 7 ப்ரோ | ஒன்பிளஸ் 7 அறிமுகம் நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்கு பெறவேண்டுமா? அப்ப இத பண்ணுங்க!
அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் அறிமுக விழா எப்பொழுது என்ற அறிவிப்பை ஒன்பிளஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் அறிமுக விழா எப்பொழுது என்ற அறிவிப்பை ஒன்பிளஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் விபரங்களும் கசிந்துள்ளது.

மே 14 ஆம் தேதி
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ போன்களை வரும் மே 14 ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

5ஜி தொழில்நுட்பத்துடன் அறிமுகம்
யுனைடெட் ஸ்டேட்ஸ், ஐரோப் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் ஒரே நேரத்தில் புதிய ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இதில் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரிபிள் கேமரா சேவையுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஏப்ரல் 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் டிக்கெட் புக்கிங்
பெங்களூரில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஒன்பிளஸ் ரசிகர்கள் பங்குபெற விரும்பினால், ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று என்ட்ரி டிக்கெட்களை வெறும் ரூ.999 என்ற விலையில் வாங்கி பங்குபெற்றுக்கொள்ளலாம். ஏப்ரல் 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் டிக்கெட்கள் புக்கிங் செய்யப்படுகிறது.
பாப் அப் செல்பி கேமரா
பாப் அப் செல்பி கேமராவுடன் நாட்ச் இல்லாத ஆள் நியூ ஸ்கிரீன் உடன் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட்டுடன் மே 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications