6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 7.!
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஏ-பிளஸ் டிஸ்பிளே வசதி மற்றும் பாப்-அப் கேமரா வசதி போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது
வரும் மே 14-ம் தேதி ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மாடல்அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஏ-பிளஸ் டிஸ்பிளே வசதி மற்றும் பாப்-அப் கேமரா வசதி போன்ற
பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப்
பார்ப்போம்.
டிஸ்பிளே:
ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு
1440 ஒ 3120 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்
மாடல்.
சிப்செட்:
இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளதுஇ பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ரியர் கேமரா:
இந்த ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 48எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி டெலிபோட்டோ கேமரா ஆதரவைக்
கொண்டுள்ளது,பின்பு 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன்
இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.
சேமிப்பு:
ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டரி:
ஒன்பிளஸ் 7 சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications