ரூ.49,999-விலையில் களமிறங்கும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்.!

ஒன்பிளஸ் 7 ப்ரோ சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

|

ஒன்பிளஸ் நிறுவனம் வரும் மே 14-ம் தேதி அசத்தலான ஒன்பிளஸ் 7 ப்ரோ(6ஜிபி ரேம்) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.49,999 என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு
வரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 8ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ52,999 என்றும் 12ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.57,999-என்றும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவரும், பின்பு இது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களிலேயே மிகப்பெரிய டிஸ்பிளேவாகும். பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா மற்றும் பாப்-அப் செல்பீ கேமராவும் இடம்பெற்றுள்ளது,பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

பேட்டரி:

பேட்டரி:

ஒன்பிளஸ் 7 ப்ரோ சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
OnePlus 7 Pro will be a costly affair, to start at Rs 49,999 in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X