இணையத்தில் வைரலாகும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் புகைப்படம்.!
இந்த ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் 7 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் ஆன்லைனில்
வெளியிடப்பட்டு வைரலாக பரவி வருகிறது.

குறிப்பாக ஒன்பிளஸ் 7 ப்ரோ மாடல் பாப்-அப் ரக செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும், பின்பு இந்த ஸ்மார்ட்போனில் பெசல் இல்லாத டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான்
கூறவேண்டும். மேலும் இந்த சாதனங்களின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது அதைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவரும், பின்பு இது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களிலேயே மிகப்பெரிய டிஸ்பிளேவாகும். பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட்:
இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
இந்த ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

கேமரா:
ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா மற்றும் பாப்-அப் செல்பீ கேமராவும் இடம்பெற்றுள்ளது,பின்பு
எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

பேட்டரி:
ஒன்பிளஸ் 7 ப்ரோ சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications