சொக்க வைக்கும் வண்ணத்தில் புதிய ஒன்பிளஸ் 7 ப்ரோ அல்மான்ட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

By Saravana Rajan
|

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் அல்மாண்ட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கலக்கும் ஒன்பிளஸ் 7 ப்ரோ

கலக்கும் ஒன்பிளஸ் 7 ப்ரோ

கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சந்தையை கலக்கி வருகிறது. இந்த போன் நெபுலா புளூ மற்றும் மிரர் க்ரே ஆகிய இரண்டு வண்ணங்களில் மட்டுமே வந்தது. இந்த நிலையில், அல்மாண்ட் எடிசன் என்ற விசேஷ வண்ணத்திலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

அல்மாண்ட் எடிசன்

அல்மாண்ட் எடிசன்

ஒன்பிளஸ் 7 ப்ரோ அல்மான்ட் எடிசன் மாடலானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட மாடலில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். ஒன்பிளஸ் 7 ப்ரோ அல்மாண்ட் எடிசன் மாடலுக்கு ரூ.52,999 விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விற்பனை துவக்கம்

விற்பனை துவக்கம்

அமேஸான் இணையதளத்தில் ஒன்பிளஸ் 7 ப்ரோ அல்மான்ட் எடிசன் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஒன்பிளஸ் ஷோரூம்கள், க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் இதர ஷோரூம்களிலும் விற்பனைக்கு கிடைக்கும். ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்பவர்களுக்கு கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகள் காத்திருக்கின்றன.

ஆன்ட்ராய்டு 9.0 பை ஓஎஸ்...

ஆன்ட்ராய்டு 9.0 பை ஓஎஸ்...

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 9.0 பை அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.7 அங்குல முழுமையான எச்டி , புளூயிட் அமோலெட் தொடுதிரையை பெற்றஇருக்கிறது. இதன் திரை 19.5:9 என்ற புலன் விகிதத்தை பெற்றிருக்கிறது.

அட்டகாசமான தொழில்நுட்பங்கள்

அட்டகாசமான தொழில்நுட்பங்கள்

கைரேகை சென்சார் மற்றும் முக அடையாளத்தை வைத்து திறக்கும் வசதி திரையிலேயே இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் திரை 90 ஹெர்ட்ஸ் வேகத்தில் புதுப்பித்துக் கொள்ளும் திறனை பெற்றிருப்பதால், மிக விரைவான செயல்திறனை வழங்கும்.

இனி ஏஎடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம்: RBI அறிவிப்பு: மக்கள் வரவேற்புஇனி ஏஎடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம்: RBI அறிவிப்பு: மக்கள் வரவேற்பு

திறன்வாய்ந்த பிராசஸர்

திறன்வாய்ந்த பிராசஸர்

இந்த ஸ்மார்ட்ஃபோனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் அட்ரினோ 640 கிராஃபிக்ஸ் பிராசஸிங் யூனிட் கார்டும் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 48 மெகாபிக்சல் திறன் கொண்ட மூன்று சென்சார்களுடன் பிரைமரி கேமராவும், முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கொண்ட பாப்-அப் முறையில் செயல்படும் செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் இதர நெட்வொர்க்களில் ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி?ஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் இதர நெட்வொர்க்களில் ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி?

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனில் யுஎஸ்பி டைப் சி போர்ட், புளூடூத் வி5.0 இணைப்பு வசதி, வார்ப் சார்ஜ் 30 என்ற ஃபாஸ்ட் சார்ஜர், 4,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களாக உள்ளன. இதுதவிர, ஏராளமான தொழில்நுட்ப வசதிகளுடன் அதி செயல்திறன் மிக்க ஸ்மார்ட்போன் மாடலாக அசத்துகிறது. பிரிமீயம் மொபைல்போன் வாங்குவோருக்கு சிறந்த சாய்ஸ்.

சந்திராயன்2க்கு ஒத்துழைக்கவில்லை காங்.மீது மாதவன் நாயர் பகீர் குற்றச்சாட்டு.!சந்திராயன்2க்கு ஒத்துழைக்கவில்லை காங்.மீது மாதவன் நாயர் பகீர் குற்றச்சாட்டு.!

Best Mobiles in India

English summary
Chinese smartphone maker OnePlus has launched OnePlus 7 Pro new Almond color model in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X