ஒன்பிளஸ் 7 ப்ரோ விற்பனை, விலை மற்றும் நீங்கள் அறிய வேண்டிய முழு விபரம்.!
ஒன்பிளஸ் நிறுவனம் நேற்று இரவு பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் தனது புதிய ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் நேற்று இரவு பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் தனது புதிய ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ என்ற இரண்டு புதிய மாடல்களை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அமேசான் பிரைம் பிரத்தியேக விற்பனை
அமேசான் தளத்தில், நாளை மதியம் 12 மணி முதல் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் விற்பனை துவங்கப்படுகிறது. முதல் கட்ட விற்பனையாக அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒன்பிளஸ் 7 ப்ரோ விற்பனை
மே 17 ஆம் தேதி முதல் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அனைத்து அமேசான் வாடிக்கையாளருக்குக் கிடைக்கும் படி தனது விற்பனையைத் துவங்குமென்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு பல சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூன் மாதம் துவங்குமென்று அறிவிக்கப்பட்டுளள்து.

ஒன்பிளஸ் 7 ப்ரோ சலுகைகள்
எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.9,300 கேஷ் பேக் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வட்டி இல்லா தவணை மற்றும் மாதாந்திர தவணை எனப் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
- 6.67' இன்ச் குவாட் எச்.டி பிளஸ் அமோலேட் நாட்ச் இல்லாத முழு திரை கொண்ட நோ நாட்ச் டிஸ்பிளே
- 90Hz ஸ்கிரீன் ரேட் கொண்ட பேசேல் கர்வுடு டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 855 பிராசஸர்
- 6ஜிபி / 8ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் வேரியண்ட்
- 128 ஜிபி மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வசதி
- யுஎப்ஸ் 3.0 ஸ்டோரேஜ் சேவை
- 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா ( SonyIMX586)
- 16 மெகா பிக்சல் கொண்ட வைடு அங்கிள் கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட டெலிபோட்டோ ட்ரிபிள் கேமரா
- 16 மெகா பிக்சல் கொண்ட பாப் அப் செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் இயங்குதளம்
- 30W வார்ப்பு சார்ஜ் கொண்ட சூப்பர் சார்ஜிங்
-4000 எம்.ஏ.எச் பேட்டரி

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை விபரம்:
- ஒன்பிளஸ் 7 ப்ரோ 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் வெறும் ரூ.48,999
- ஒன்பிளஸ் 7 ப்ரோ 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் வெறும் ரூ.52,999
- ஒன்பிளஸ் 7 ப்ரோ 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் வெறும் ரூ.57,999
ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மிரர் கிரெய், அல்மோன்ட் மற்றும் நெபுலா ப்ளூ ஆகிய மூன்று நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications